Enable Javscript for better performance
இந்த வாரம் எந்தெந்த  ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகிறார்கள்?- Dinamani

சுடச்சுட

  

  இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகிறார்கள்?

  Published on : 24th May 2019 03:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  astrology

   

  12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மே 24 - மே 30) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  பணப்புழக்கம் நன்றாக இருக்கும் எடுத்த காரியங்கள் அனைத்தும் எதிர்பாத்த முடிவைக் கொடுக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.  உறவினர்கள் பாராமுகம் காட்டுவர். எனவே அவர்களிடம் எச்சரிக்கை தேவை. 

  உத்தியோகஸ்தர்கள் அனைத்து காரியங்களிலும் வெற்றி வாகை சூடுவார்கள். மேலதிகாரிகளின் ஆதரவுடன் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வர். 

  வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நல்லபடியாகவே முடியும். கூட்டாளிகன் உங்களை நம்பி புதிய முதலீடுகள் செய்ய சம்மதிப்பார்கள்.

  விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளுக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.

  அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். உங்கள் பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் பாராட்டும். 

  கலைத்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும். சக கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். 

  பெண்மணிகள் மற்றவர்களின் பேச்சை உடனே நம்பிவிட வேண்டாம். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். மாணவமணிகள் கடுமையாக  முயற்சித்தால் அதற்கேற்ற பலனை அடைவார்கள். 

  பரிகாரம்: துர்க்கையையும் மகாவிஷ்ணுவையும் வணங்கி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 24, 25

  சந்திராஷ்டமம்: இல்லை

  {pagination-pagination}
  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இடருக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். உங்களின் மதிப்பு மரியாதை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி  அதிகரிக்கும். தேவைகேற்ப உறவினர்கள் உதவுவார்கள். சிலர் வீடு மாறுவார்கள். 

  உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவால் வேலைப்பளு குறையும். அதனால் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வியாபாரிகள்  பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். 

  விவசாயிகளுக்கு மகசூல் சுமாராக இருக்கும். ஆகையால் மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறலாம். கால்நடைகளால் சில செலவுகளைச் சந்திக்க நேரிடும்.  

  அரசியல்வாதிகளைத் தேடி, புதிய பொறுப்புகள் வந்து சேரும். முக்கிய பிரச்னைகளில் அமைதி காப்பது  நல்லது. 

  கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். பாராட்டும் பணமும் ஒருங்கே கிடைக்கும். 

  பெண்மணிகள் ஆடை, ஆபரணங்களை வாங்கும் எண்ணத்தைத் தள்ளிப்போடவும். 

  குடும்பத்தாரிடம் சுமுகமாக இருக்கவும். மாணவமணிகள் விளையாட்டில் கவனத்தைக் குறைத்துக்கொண்டு, கல்வியில் நாட்டம் செலுத்தவும். 

  பரிகாரம்: சிவபெருமானையும், சூரிய பகவானையும் வழிபட்டடு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 25, 26

  சந்திராஷ்டமம்: இல்லை

  {pagination-pagination}
  மிதுனம் (மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  திட்டமிட்ட வேலைகளில்  தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். குடும்பத்தினரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும்.  பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். மனதில்  புதிய தெளிவுகள் பிறக்கும். 

  உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை குறித்த நேரத்திற்குள் முடிப்பார்கள். ஆனாலும் மறைமுகமாக சில சங்கடங்கள்  உண்டாகலாம். 

  வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சுமுகமான நிலைமை தென்படும். அதேநேரம் அதிக லாபத்தை எதிர்பார்த்து வீண்கடன் தொல்லைகளுக்கு ஆளாக  வேண்டாம். 

  விவசாயிகளுக்கு பழைய கடன்கள் வசூலாகும். தானியப் பொருள்கள் உற்பத்தியில் நல்ல பலன் உண்டு.

  அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலமிது. கட்சி மேலிடத்தின் உத்தரவை நிறைவேற்ற முனைப்புடன் செயல்படுங்கள். 

  கலைத்துறையினர் புகழைத் தக்க வைத்துக் கொள்வார்கள். ஆனாலும் வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். 

  பெண்மணிகளக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாரிடம் அன்பு பாசத்தோடு பழகுவீர்கள். 

  மாணவமணிகள் படிப்பில் நல்லமதிப்பெண்களை அள்ளுவார்கள். விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கும். 

  பரிகாரம்: புதன் கிழமைகளில் ஸ்ரீ ராமரை  வழிபட்டு  நலம் பெறவும். 

  அனுகூலமான தினங்கள்: 26. 27 

  சந்திராஷ்டமம்: 24, 25

  {pagination-pagination}
  கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  உங்கள் பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலம் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். எதிரிகளும்  நேசக்கரம் நீட்டுவார்கள். பிரச்னைகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பார்கள்.

  உத்தியோகஸ்தர்களுக்குமனதை வருத்தி வந்த பிரச்னைகள் விலசும். மேலதிகாரிகள் உங்களின் சமயோசித புத்தியைப் பாராட்டுவார்கள்.  

  வியாரிகளுக்கு கொடுக்கல்வாங்கல்களில் சுமுகமானநிலைமை உருவாக்கும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை நிலவும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் நன்றாக இருக்கம்.  கால்நடைகளால் பலன் அதிகரிக்கும்.

  அரசியல்வாதிகள் எல்லோராலும் பாராட்டப்படுவார்கள். புதிய பதவிகளில் அமர்ந்து மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

  கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் நாடிவரும்.

  பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கம். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள்.உற்றார் உறவினர்களிடம் ஒற்றுமை வளரும். மாணவமணிகள்  செய்யும் கல்விப் பயிற்சிகளுக்கு தகுந்த பலன் கிடைக்கும். 

  பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வணங்கி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 25, 29.

  சந்திராஷ்டமம்: 26,27, 28

  {pagination-pagination}
  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். படிப்படியாக பொருளாதாரத்தில் முன்னேற்றம்  காண்பீர்கள். மற்றவர்களைச் சார்ந்துசெய்து  வந்த செயல்களை தனியாகச்  செய்யத் தொடங்குவீர்கள். பண விஷயங்களில் கண்டிப்புத் தேவை. 

  உத்தியோகஸ்தர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட பயணங்களைத் தள்ளிப்போடவும், சக ஊழியர்களின் உதவியுடன் வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்ளவும்.

  வியாபாரிகள் நன்கு யோசித்துப் புதிய முயற்சிகளில் இறங்கவும். கூட்டாளிகளை நம்பி,எதையும் செய்ய வேண்டாம்.

  விவசாயிகளக்கு கொள்முதலில் லாபம் அதிகரிக்கும். நீர்ப்பாசன வசதிகால் மகசூலம் உயரும். 

  அரசியல்வாதிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும். கட்சி மேலிடத்தில் ஆதரவு குறைவாக இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். 

  கலைத்துறையினர் ஒற்றுமை சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. அவ்வப்போது சில கருத்து வேறுபாடுகள்தோன்றும் மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள்.  உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி  உண்டு.

  பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 25, 28 

  சந்திராஷ்டமம்: 29, 30

  {pagination-pagination}
  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  பொருளாதாரத்தில்முன்னேற்றம் ஏற்படும். வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். செலவுகள் அதிகரிப்பதால் சிக்கனத்தை மேற்கொள்ளவும். உடல்நலத்தில் கவனம்  செலுத்தவும். எதிர்பாராத குழப்பங்களும் வந்துசேரும். 

  உத்தியோகஸ்தர்கள் இடைவிடாது உழைக்கவேண்டிவரும். கோரிக்கைகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களிடம் கவனமாக  செயல்படவும். 

  வியாபாரிகள் சிறிய தடைகளுக்குப்பிறகு லாபத்தைக் காண்பார்கள். விவசாயிகளுக்கு குத்தகைகளால் ஏமாற்றமும் இழப்பும் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிரிப்பது  நல்லது.

  அரசியல்வாதிகள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். எதிரிகளும் உங்களைக் கண்டு அஞ்சுவார்கள். கலைத்துறையினருக்கு பட வாய்ப்புகள் சுமாராகவே கிடைக்கும். ரசிகர்களின்  ஆதரவும் குறையும். 

  பெண்மணிகள் புதிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். 

  மாணவமணிகள்  கல்வியில் கடினமாக உழைக்க வேண்டி வரும். விளையாட்டுகளில் வெற்றிபெற அதிக சிரத்தை தேவை. 

  பரிகாரம்: தினமும் விநாயகரையும் சனீஸ்வரரையும் வணங்கி வரவிம். 

  அனுகூலமான தினங்கள்: 27, 28.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். சிலருக்கு  நீண்ட நாள்களாக இருந்துவந்த உடல் உபாதைகள் நீங்கும். சொத்துப் பிரச்னைகளில் இருந்துவந்த இடையூறுகள் விலகும்.  சிலருக்கு ஆலயத் திருப்பணிகளில் பங்குபெறும் வாய்பு உண்டாகம். 

  உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்குக்கீழ்  வேலை செய்யும் ஊழியர்களிடம் மனக்கசப்பு ஏற்படும்.  

  வியாபாரிகளுக்கு  உழைப்புக்கேற்ற வருமானம் இருக்கும். பிரச்னைகளைச்  சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். 

  விவசாயிகள் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலனைப் பெறலாம். சிலருக்கு வழக்குகளால் மன உளைச்சல் ஏற்படும். 

  அரசியல்வாதிகள் கட்சிப்பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கட்சி மேலிடத்தின் கோபத்திற்கு உள்ளாகாதப்படி நடந்துகொள்ளவும். 

  கலைத்துறையினருக்கு தொடர் முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நண்பர்களும் உங்களுக்கு உதவ மாட்டார்கள். பெண்மணிகள் ஆடம்பரப்  பொருள்களை  வாங்குவார்கள்.  குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். 
  மாணமணிகள்விளையாட்ல் கவனத்துடன் ஈடுபடவும். பெற்றோர்களை அனுசரித்துச் செல்லவும். 

  பரிகாரம்: சனியன்று சனிபகவானையும் செய்வாயன்று முருகப்பெருமானையும் வழிபடவும்.

  அனுகூலமான தினங்கள்: 25, 29.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  உங்களின் மதிப்பு மரியாதை உயரும்.  குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் குலதெய்வ வழிபாடுகளும் நடைபெறும். உறவினர்களின் ஆதரவு கிடைத்து சுற்றத்தினர் மத்தியில்  பெருமையடைவீர்கள். பொருளாதார வளர்ச்சி பலமடங்கு மேம்படும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் சாதகமான பலனைப் பெற்றுத் தரும். வியாபாரிகளுக்கு புதிய  தொழில்கள்அனுகூலத்தைக் கொடுக்கும். கடையை அழகுபடுத்தி, வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல்அதிகரிக்கும் விளைச்சலில் ஏற்படும்  பாதிப்புகளை கட்டுப்படுத்தவும். 

  அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தில் பொறுமையோடு நடந்துகொள்ளவும். தேவையற்ற அணுகுமுறையால் தொண்டர்களின் அவமதிப்புக்கு ஆளாக நேரிடலாம். 

  கலைத்துறையினருக்கு புகழும் நற்பெயரும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமையில் சில பாதிப்புகள் ஏற்படும்.  எதையும் புரிந்துகொண்டு செயல்படவும்.

  மாணவமணிகள் ஆசிரியரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். 

  பரிகாரம்: துர்க்கையையும் பைரவரையும் வணங்கி நலம் பெறவும். 

  அனுகூலமான தினங்கள்: 26, 27.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  உங்களுக்கு தெய்வ அனுக்கிரகம் சிறப்பாக இருக்கும்.  பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உடன்பிறந்தோர்  அன்புக் கரம் நீட்டுவார்கள். கவலைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். 

  உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். மேலதிகாரிகளும் சக ஊழியர்களும் நட்புடன்  பழகுவார்கள். பணவரவும் நன்றாக இருக்கும். 

  வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவார்கள். புதிய விற்பனையுக்திகளை புகுத்தி பொருள்களின் விற்பனையை பெருக்குவார்கள். 

  விவசாயிகள் பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளால் பலன் அதிகரிக்கும். 

  அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். சமுதாயப் பணிசெய்து மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அதில்  நிம்மதி அடைவீர்கள். கலைத்துறையினருக்கு  உயர்ந்தவர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள்  கிடைக்கும்.

  பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் அந்தஸ்து உயரும். மாணவமணிகள் தினமும் நன்றாகப் படித்து, எதிர்பார்த்த மதிப்பெண்களை  அள்ளுவார்கள். கோரிக்கைகள் நிறைவேறும்.

  பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 29, 30.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  நினைத்த காரியங்கள் அனைத்தும் கொஞ்சம்கொஞ்சமாக நிறைவேறும்.மற்றவர்கள் மெச்சும்படி நடந்துகொள்வீர்கள்.  குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள்  நடைபெற வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

  உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனத்துடன் ஈடுபடவும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல்களைச் சந்திப்பார்கள். எனவே கடன் கொடுத்து  வியாபாரத்தைப் பெருக்க நினைக்காதீர்கள்.விவசாயிகள் சலிப்பில்லாமல் உழைத்தால் பலன்களைப் பெறலாம். புதிய குத்தகை முயற்சிகளில் இறங்க வேண்டாம்.  கொள்முதலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். 

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் அரிய சாதனைச் செய்வீர்கள். 

  கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சந்தோஷம் காணமுடியும். கணவரிடம் ஒற்றுமை காணப்படும்.  குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். 

  மாணவமணிகளுக்கு படிப்பில் குளறுபடியான சூழ்நிலை நிலவும். பெற்றோர் ஆசிரியர் சொற்படி நடக்கவும். 

  பரிகாரம்: விநாயகரை அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 24, 30.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு. எடுத்த காரியங்கள்அனைத்தும் சிறிய தடைகளுடன் வெற்றியடையும். பொருளாதார நிலை சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி  அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ப உறவினர்கள் உதவுவாக்ரள். 

  உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை பதற்றப்படாமல் செய்யவும். சக ஊழியர்களும் சற்று பாராமுகமாகவே இருப்பார்கள். வியாபாரிகள் புதிய வழிகளில்  வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபத்தைக் காண்பீர்கள். 

  விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் சிறப்பாகவே இருக்கும். விவசாய உதவியாளர்களால் பலனுண்டு. 

  அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் ஆதரவு சுமாராகவே கிடைக்கும். அவர்கனின் கண்களிலிருந்து ஒதுங்கி இருக்கவும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் மூலம் நல்ல  வாய்ப்புகள் கிடைக்கும். 

  பெண்மணிகளைத் தேடி மகிழ்ச்சியான செய்திகள் வரும். சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மாணவமணிகளுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். 

  பரிகாரம்: புதன் கிழமைகளில் பெருமான் கோயிலில் நெய் தீபமேற்றி வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 27, 30.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  பணம் பலவகையிலும் வரும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு இது சரியான காலம். எதிர்பார்த்த பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில்  அனைத்தும் வெற்றியைக் கொடுக்கும். பேச்சு வன்மையால் நன்மைகள் உண்டாகும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும் சிறுஇடையூறுகள் தோன்றினாலும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். 

  வியாபாரிகளுக்கு திட்டமிட்டபடி வருவாய் கிடைக்கும். இருப்பினும் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகள் போட்டிகளை நன்கு சாதுர்யத்துடன் சமாளித்து,  வெற்றியடைவார்கள். 

  அரசியல்வாதிகளின் மக்கள் தொண்டுகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். எதிரிகளின் பலம் குறையும். வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு புகழும்  பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். 

  பெண்மணிகள் குடும்பத்தில் வீண் குழப்பங்களைச் சந்திக்க நேரிடும். அனைவரிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்  விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். 

  பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று அம்பாளை தரிசனம் செய்யுங்கள். 

  அனுகூலமான தினங்கள்: 28, 30.

  சந்திராஷ்டமம்: இல்லை.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai