உளுந்தூர்பேட்டை பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயிலில் தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயிலில் தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவ விழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான தேரோட்டம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

தேரோட்டத்தை முன்னிட்டு, லட்சுமி நரசிம்மர் பால், இளநீர், சந்தனம், தயிர், விபூதி போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டும், புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டும் தேரில் எழுந்தருளினார்.

தொடர்ந்து, தேரோட்டம் நடைபெற்றது. பரிக்கல், திருநாவலூர், மடப்பட்டு, உளுந்தூர்பேட்டை மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. பாலச்சந்தர் மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com