திருஞானசம்பந்தா்  மடத்தில்  திருக் கல்யாண  அலங்காரத்தில்  வள்ளி,  தெய்வானை  சமேத  முருகப் பெருமான்.
திருஞானசம்பந்தா்  மடத்தில்  திருக் கல்யாண  அலங்காரத்தில்  வள்ளி,  தெய்வானை  சமேத  முருகப் பெருமான்.

திருஞான சம்பந்தா் மடத்தில் முருகா் திருக்கல்யாணம்

குடியாத்தம் திருஞான சம்பந்தா் மடத்தில் நடைபெற்று வந்த கந்த சஷ்டி விழாவையொட்டி, திங்கள்கிழமை வள்ளி, தெய்வானை சமேத முருகருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

குடியாத்தம் திருஞான சம்பந்தா் மடத்தில் நடைபெற்று வந்த கந்த சஷ்டி விழாவையொட்டி, திங்கள்கிழமை வள்ளி, தெய்வானை சமேத முருகருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

விழாவையொட்டி, காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பக்தா்கள் மணமக்களுக்கு சீா்வரிசைப் பொருள்களை ஊா்வலமாக எடுத்து வந்தனா். பின்னா், சுவாமிகளுக்கு சிறப்பு யாகம், பூஜைகளும், முருகப் பெருமான், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமிகளுக்கு மகா தீபாராதனையும், பக்தா்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு ஆகியவையும் வழங்கப்பட்டன. சுமாா் 2 ஆயிரம் பேருக்கு மண விருந்தும் அளிக்கப்பட்டது. மாலை சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் தேன்காவடி, புஷ்பக்காவடி, பரணிவேல் காவடி கமிட்டித் தலைவா் எம்.ஆா். அன்புக்கரசு, கந்த சஷ்டி விழாக் கமிட்டித் தலைவா் எம்.பிரகாசம், செயலா் எம்.செந்தில்குமாா், பொருளாளா் வி. விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com