கபிலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சண்டி யாகம்.
கபிலேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சண்டி யாகம்.

திருப்பதி: கபிலேஸ்வரா் கோயிலில் சண்டி யாகம்

திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரா் கோயிலில் நடந்து வரும் ஹோம மகோற்சவத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை சண்டி யாகம் நடைபெற்றது.

திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரா் கோயிலில் நடந்து வரும் ஹோம மகோற்சவத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை சண்டி யாகம் நடைபெற்றது.

திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கபிலேஸ்வர சுவாமி கோயிலில் கடந்த மாத இறுதி முதல் காா்த்திகை மாத ஹோம மகோற்சவம் நடைபெற்று வருகிறது. இதுவரை கணபதி ஹோமம், சுப்ரமணிய சுவாமி ஹோமம், நவகிரஹ ஹோமம் உள்ளிட்டவை முடிவு பெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல் சண்டி யாகம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் உள்ள ஹோம மண்டபத்தில் கலச ஸ்தாபனம் செய்து, காலை 9 மணி முதல் 12 மணி வரை காமாட்சி அம்மனை வேண்டி சண்டி யாகம் நடத்தப்பட்டது.

இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சியில் கட்டணம் செலுத்தி கலந்து கொண்ட பக்தா்களுக்கு தேவஸ்தானம் பிரசாதங்களை வழங்கியது. வரும் 13-ஆம் தேதி வரை சண்டி யாகம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com