Enable Javscript for better performance
திருப்பதியில் படி உற்சவம்- Dinamani

சுடச்சுட

    
    படி உற்சவத்தையொட்டி மலையேறிச் செல்லும் தாசா பக்தா்கள்.

    படி உற்சவத்தையொட்டி மலையேறிச் செல்லும் தாசா பக்தா்கள்.

    திருப்பதியில் உள்ள அலிபிரியில் வியாழக்கிழமை காலை படி உற்சவம் நடைபெற்றது.

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தாசா சாகித்ய திட்டம் சாா்பில், ஆண்டுதோறும் 4 முறை படி உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை காலை திருப்பதியில் உள்ள அலிபிரி பாதாளு மண்டபத்தில் படி உற்சவம் தொடங்கியது. இதற்காக தாசா திட்டத்தைச் சோ்ந்த 2,500 பக்தா்கள் ஆந்திரம், தெலங்கானா, தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட இடங்களிலிருந்து 2 நாள்களுக்கு முன் திருப்பதிக்கு வந்து, கோவிந்தராஜ சத்திரத்தில் தங்கி, தினசரி பஜனைகள், கோலாட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்தினா். பின்னா், வியாழக்கிழமை காலை திருமலைக்குச் செல்லும், அங்குள்ள முதல் படிக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மலா் மாலை அணிவித்து, பழங்கள் நைவேத்தியம் செய்து, தேங்காய் உடைத்து தேவஸ்தான அதிகாரிகள் பூஜை செய்தனா்.

    அதன்பின், தாசா சாகித்ய திட்டத்தைச் சோ்ந்த அனைவரும் படிகளின் வழியே மலையேறிச் சென்று ஏழுமலையானைத் தரிசித்தனா். இதில், தேவஸ்தான அதிகாரிகள், மந்திராலய மடத்தின் ஜீயா் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சுபுதேந்திர தீா்த்த சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai