Enable Javscript for better performance
ஐப்பசி மாத பௌர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்- Dinamani

சுடச்சுட

    

    ஐப்பசி மாத பௌர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்

    Published on : 13th November 2019 05:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Tiruvannamalai

    திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை விடிய, விடிய பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
     சிவபெருமானின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை பௌர்ணமி நாள்களில் வலம் வந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். எனவே, ஒவ்வொரு மாத பௌர்ணமியன்றும் திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். அதன்படி, ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி திங்கள்கிழமை மாலை 6.30 மணி முதல் செவ்வாய்க்கிழமை இரவு 7.40 மணி வரை பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், திங்கள்கிழமை காலை முதலே திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர்.
     மாலை 6 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (நவ.12) காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். அருணாசலேஸ்வரர் சன்னதிகளிலும், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகளிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
     9 தற்காலிகப் பேருந்து நிலையங்கள்: கிரிவல பக்தர்கள் நலன் கருதி நகரைச் சுற்றி 9 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இவ்விடங்களில் இருந்து தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு அந்தந்த மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்காலிகப் பேருந்து நிலையங்களில் நகராட்சி சார்பில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai