Enable Javscript for better performance
ராமநாத சுவாமி கோயிலில் பூஜை செய்த செங்கற்களுடன் பக்தர்கள் அயோத்தி பயணம்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாத சுவாமி கோயிலில் பூஜை செய்த செங்கற்களுடன் பக்தர்கள் அயோத்தி பயணம்

    Published on : 12th November 2019 11:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    RMS

    ராமேசுவரம் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட செங்கற்களை ரயில் மூலம் அயோத்திக்கு பக்தர்கள் ஞாயிற்றுகிழமை எடுத்துச் சென்றனர்.

     அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த நவ. 9-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் தமிழக மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த ராம பக்தர்கள், அயோத்தியில் கட்ட உள்ள ராமர் கோயிலுக்கு அனுப்புவதற்காக செங்கற்களில் ஸ்ரீ ராமா என எழுதி அவற்றுக்கு ராம நாம ஜப வேள்வி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை ஞாயிற்றுகிழமை நடத்தினர்.

     இதனையடுத்து, பூஜை செய்யப்பட்ட செங்கற்களை ராமேசுவரம் ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு அயோத்திக்கு புறப்படும் சாரதா விரைவு ரயிலில் பக்தர்கள் எடுத்து சென்றனர்.

    இவர்கள் வரும் 13-ஆம் தேதி புதன்கிழமை அயோத்தியில் ராமர் கோயில் நிர்வாகி நித்திய கோபால்தாஸ் சுவாமிகளிடம் ஒப்படைத்து ஒரு வாரம் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai