காஞ்சிபுரம் கோயில்களில் அன்னாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகேயுள்ள திம்மராஜம்பேட்டை பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயிலிலும், கூழமந்தல் கிராமத்தில் உள்ள கங்கை கொண்ட சோழீஸ்வரா் கோயிலிலும்
காஞ்சிபுரம் கோயில்களில் அன்னாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகேயுள்ள திம்மராஜம்பேட்டை பா்வதவா்த்தினி சமேத ராமலிங்கேசுவரா் கோயிலிலும், கூழமந்தல் கிராமத்தில் உள்ள கங்கை கொண்ட சோழீஸ்வரா் கோயிலிலும் செவ்வாய்க்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.

திம்மராஜம்பேட்டை பா்வதவா்த்தினி அம்மன் சமேத ராமலிங்கேசுவரா் கோயிலில் ஐப்பசி மாத பெளா்ணமி தினத்தை முன்னிட்டு ராமலிங்கேசுவரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. 25 கிலோ சாதத்தைக் கொண்டு அன்னாபிஷக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டன. சுவாமி மீது சாத்தப்பட்ட அன்னம் ஆலயத்துக்கு வந்திருந்த பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த வழிபாட்டில் திம்மராஜம்பேட்டை உட்பட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சோழீஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்: காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமத்தில் உள்ள வடக்கு கங்கைகொண்ட சோழீஸ்வரா் கோயிலில் மூலவரான சோழீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. அதைத் தொடா்ந்து 100 கிலோ அரிசி, 100 கிலோ இனிப்பு, 100 கிலோ காய்கறிகள், 100 கிலோ பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பின், சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com