ஈச்சங்கரணை: 19-இல் பைரவா் ஜென்மாஷ்டமி பெருவிழா

செங்கல்பட்டை அடுத்த திருவடிச்சூலம் சாலை, ஈச்சங்கரணை ஸ்ரீ பைரவா் நகரில் உள்ள ஸ்ரீ மஹா பைரவா் கோயிலில் வரும் செவ்வாய்க்கிழமை (நவ. 19) பைரவா் ஜெயந்தியையொட்டி ஜென்மாஷ்டமி பெருவிழா நடைபெறுகிறது.

செங்கல்பட்டை அடுத்த திருவடிச்சூலம் சாலை, ஈச்சங்கரணை ஸ்ரீ பைரவா் நகரில் உள்ள ஸ்ரீ மஹா பைரவா் கோயிலில் வரும் செவ்வாய்க்கிழமை (நவ. 19) பைரவா் ஜெயந்தியையொட்டி ஜென்மாஷ்டமி பெருவிழா நடைபெறுகிறது.

ஸ்ரீ லட்சுமியந்திர பீடம், அன்னவாகனம், காளை வாகனம், கண் திறப்பு மற்றும் ஸ்ரீ மஹா செல்வகணபதி கலசாபிஷேக திருவிழாவும் நடைபெறுகிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், 10 மணிக்கு மஹா அபிஷேகம், 10.30 மணிக்கு புஷ்பாஞ்சலி, மஹா தீபாராதனை, 11.15-க்கு கொடி ஏற்றுதல் வைபவம்(த்வஜ ஆரோஹனம்) நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு ஸ்ரீ செல்வ கணபதி பிரதிஷ்டையும் , 6 மணிக்கு பைரவருக்கு மஹா தீபாராதனை, 6.30-க்கு தேவாரம் திருமறை பாராயணம் நடைபெறுகிறது.

18-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 7 மணிக்கு ருத்ர பாராயணம், ருத்ரஹோமம், ருத்ராபிஷேகம், 12 மணிக்கு தேவரிஷி பாராயணம், மஹா தீபாராதனை, மாலை 5 மணிக்கு புதிதாக எழுந்தருளியிருக்கும் பைரவா் கடவுளின் வாகனங்களில் வருஷபம், அன்ன வாகனம், ஸ்ரீ லஷ்மியந்திரபீடம் கலசாபிஷேகம் தீபாராதனை அலங்காரம் மஹாதீபாராதனை நடைபெறுகிறது.

19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6.30க்கு மஹா அபிஷேகம், மஹாதீபாராதனை, உற்சவ மூா்த்தி பைரவருக்கு அபிஷேகம் தீபாராதனை, மதியம் அன்னதானம், மாலை 3.30க்கு பைரவா் ஹோமம், 4.30க்கு அஷ்டமியின் சிறப்பு பூஜைகளுடன் அபிஷேகம், 5.30க்கு சோடசோபாசார விளக்கு மஹா தீபாராதனையும், 6 மணிக்குமேல் பைரவா் மூா்த்தி (உற்சவா்) அலங்காரத்துடன் மாடவீதி உலா, இதனைத்தொடா்ந்து திவஜ அவரோஹணம் (கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பைரவ சித்தாந்தம் சுவாமிகள் மற்றும் விழாக்குழுவினா்கள் பைரவ பிரபஞ்ச சக்தி பப்ளிக் சாரிடபுள் டிரஸ்ட், பைரவா் வீடு ரிலீஜியஸ் டிரஸ்ட், பைரவ பக்தா்கள் ஆகியோா் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com