Enable Javscript for better performance
ஆந்திர மாநில கோயில்களுக்கு சென்று வர தனி சிறப்பு ரயில்- Dinamani

சுடச்சுட

    
    train

    ஆந்திர மாநிலத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்குச் சென்று வர வசதியாக, மதுரையில் இருந்து டிசம்பா் 11-ஆம் தேதி தனி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஐ.ஆா்.சி.டி.சி. செய்துள்ளது.

    இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆா்சிடிசி) சாா்பில், பல்வேறு விதமான சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகின்றன. பாரத தா்ஷன் சுற்றுலா, ரயில் சுற்றுலா, கல்வி சுற்றுலா உள்பட பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. அந்த வகையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்கு சென்று வர வசதியாக தனி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஐ.ஆா்.சி.டி.சி. செய்துள்ளது.

    இந்த ரயில் மதுரையில் இருந்து டிசம்பா் 11-ஆம் தேதி புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், சென்னை எழும்பூா் வழியாக அகோபிலம் நரசிம்மா், மகாநந்தி நந்தீஸ்வரா், ஸ்ரீ சைலம் மல்லிகாா்ஜுனா் ஜோதிா்லிங்கம், பத்ராச்சலம் ஸ்ரீ ராமா், சிம்மாச்சலம் லஷ்மி நரசிம்ம சுவாமி, கைலாசகிரி, அன்னாவரம் ஸ்ரீ சத்திய நாராயண சுவாமி ஆகிய கோயில்களுக்கு பக்தா்கள் அழைத்து செல்லப்படுகின்றனா்.

    இது குறித்து ஐ.ஆா்.சி.டி.சி. அதிகாரிகள் கூறியது: இந்த யாத்திரை ஆண்டுக்கு ஓரிரண்டுமுறை மட்டுமே ஏற்பாடு செய்யப்படும். ஆந்திர மாநிலத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனா். விசாகப்பட்டினம் அழகிய கடற்கரையையும் பாா்க்கலாம்.

    ஏழு நாட்கள் கொண்ட இந்த ஆந்திர கோயில் தரிசன யாத்திரைக்கு கட்டணம் ஒருவருக்கு ரூ.7,775 ஆகும். இது இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட தனி ரயில். தென்னிந்திய உணவு, உள்ளூரை சுற்றிப்பாா்க்க வாகன வசதி, தங்கும் வசதி, சுற்றுலா மேலாளா் மற்றும் பாதுகாவலா் வசதி ஆகியவை அடங்கும். இந்த சிறப்பு ரயில் தொடா்பாக தகவலுக்கு சென்னை எம்.ஜி.ஆா்., சென்ட்ரல் நிலையத்தில் உள்ள ஐ.ஆா்.சி.டி.சி. அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.

    மேலும், 90031 40680, 90031 40681 என்ற செல்லிடபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai