பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோயிலில் அக்.5-ல் மூல நட்சத்திர திருமஞ்சனம்

பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோயிலில் அக்டோபர் 5-ம் தேதி மூல நட்சத்திர திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோயிலில் அக்.5-ல் மூல நட்சத்திர திருமஞ்சனம்

பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோயிலில் அக்டோபர் 5-ம் தேதி மூல நட்சத்திர திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் மூல நட்சத்திரத்தன்றும், ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று பால் அபிஷேக திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. அந்தவகையில், இந்த மாதம் அக்டோபர் 5-ம் தேதி சனிக்கிழமையன்று ஆஞ்சநேயரின் ஜென்ம நட்சத்திரமும், புரட்டாசி மாதம் 3-ம் சனிக்கிழமையும் சேர்ந்து வருகின்றது.

கடந்த 30 ஆண்டுகளுக்குப் பின் புரட்டாசி சனிக்கிழமையும், ஜென்ம நட்சத்திரமும் ஒன்றாக இணைகிறது என்பதால் இது மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. இந்த விசேஷ நன்னாளில் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 1,500 லிட்டர் பால் மற்றும் மங்கள திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது. 

இந்த விசேஷ திருமஞ்சனத்தில் பங்குபெற விரும்புபவர்கள் கோயில் டிரஸ்டில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com