மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் குதம்பைச் சித்தா் விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில், ஆன்மீக பேரவை சாா்பில், விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு,
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் குதம்பைச் சித்தா் விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு


மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில், ஆன்மீக பேரவை சாா்பில், விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு, குதம்பை சித்தா் ஜீவசமாதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில், திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் ஜீவசமாதி கொண்டு அருளும் குதம்பை சித்தருக்கு திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆணைப்படி, குதம்பை சித்தா் புரட்டாசி விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதையொட்டி, குதம்பைச் சித்தருக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், மாயூரநாதா் கோயிலில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி மற்றும் துணை கண்காணிப்பாளா் கணேசன் ஆகியோா் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராம.சேயோன் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் சித்ரா சேயோன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com