Enable Javscript for better performance
Weekly Prediction (october 4 - october 10) | வார பலன்கள்- Dinamani

சுடச்சுட

  

  இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தைத் தரப்போகிறது?

  Published on : 04th October 2019 01:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  prediction

   

  12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (அக்டோபர் 04 - அக்டோபர் 10) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  ஆன்மிகவாதிகளுக்கு இது நன்மை தரும் காலமாகும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். கையிருப்பு சிறிது கரையும். வேலையில் சுறுசுறுப்பு இராது. மனக்குழப்பங்கள் ஏற்பட்டு அமைதி போகும். யாரிடமும் மனம் விட்டு பேச வேண்டாம். 

  உத்தியோகஸ்தர்களுக்கு ஒருவிதமான திகிலான நிலையிலேயே கழியும். பொறுமையுடன் அலுவலக ஊழியர்களைக் கையாளுங்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி வருமானத்தைப் பெருக்க நினைப்பார்கள். போட்டி பொறாமைகள் சற்று கூடுதலாகவே இருக்கும். கவனமாக இருக்கவும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். 

  அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் தொல்லை குறையும். உங்களுக்கு எதிரான வழக்குகளில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். தொண்டர்களின்ஆதரவு கூடும்.

  கலைத்துறையினர் ஒப்பந்தங்களைச் சிறப்பாக முடித்துக் கொடுத்து நற்பெயர் எடுக்க முனைவார்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். செல்வாக்கு உயர்த்திக் கொள்வார்கள். மாணவமணிகள் விடாமுயற்சியால் வெற்றியடைவார்கள். காலை நேரத்தில் பாடங்களைப் படிக்கவும்.

  பரிகாரம்: செவ்வாயன்று துர்க்கையம்மனை செவ்வரளி கொண்டு வணங்கவும்.

  அனுகூலமான தினங்கள்: 5, 6. 

  சந்திராஷ்டமம்: 4.

  {pagination-pagination}

  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். திட்டமிட்ட செயல்களில் வெற்றி பெறுவீர்கள். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மனதில் எதையோ இழந்தது போன்ற எண்ணம் உண்டாகும். குலதெய்வ வழிபாடு செய்யவும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு இல்லை. வியாபாரிகள் பிரச்னைகளுக்குத் தீர்வு  காண்பார்கள். உழைப்பிற்குத் தகுந்த பலனுண்டு. விவசாயிகளுக்கு விற்பனை லாபகரமாக நடக்கும். புதிய விளைநிலங்கள் வாங்கும் எண்ணத்தைத் தள்ளிப்போடவும். 

  அரசியல்வாதிகளின் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

  கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்து முடிப்பதிலும் பணவரவினைப் பெறுவதிலும் தாமதம் ஏற்படும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அந்தஸ்து உயரும். கணவருடனான ஒற்றுமை சிறப்பாக இருக்கும். 

  மாணவமணிகள் சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பைப் பெறுவார்கள்.

  பரிகாரம்:  விஷ்ணுபகவானை துளசி கொண்டு அர்ச்சிக்கவும். 

  அனுகூலமான தினங்கள்: 7, 9.  

  சந்திராஷ்டமம்: 5, 6.

  {pagination-pagination}
  மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  உறுதியான எண்ணங்களுடன் பெரிய வெற்றிகளைப் பெறுவீர்கள். இல்லத்தில் அன்பு, பாசம் அதிகரிக்கும். உடன் பிறந்தோர் வழியில் சிறு குழப்பங்கள் உண்டாகும். வருமானம் படிப்படியாக வளரும். நினைத்த காரியங்கள் இடையூறு இன்றி முடிவடையும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு  வேலைப்பளு அதிகரித்தாலும் குறித்த காலத்தில் வேலைகளைச் செய்து முடிப்பர். மேலதிகாரிகளும் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு அரசாங்கத்தால் அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக இருக்கும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகமாகும். புதிய வாழ்க்கை வசதிகள் பெருகும்.

  அரசியல்வாதிகளுக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமான சூழ்நிலை அமையாது. மனதில் ஏற்படும் சஞ்சலமும் மேலிடத்தின் அதிருப்தியும் குழப்பத்தில் ஆழ்த்தும். 

  கலைத்துறையினர் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினர்களிடம் அன்பாகப் பழகுவீர்கள். மாணவமணிகள் அதிக அக்கறையுடன் பாடங்களைப் படிக்கவும். பெற்றோர் ஆசிரியர் சொற்படி நடக்கவும்.

  பரிகாரம்: ஸ்ரீ ராமபக்த அனுமனை வழிபடவும். “ஸ்ரீ ராமஜெயம்’ ஜபிக்கவும். 

  அனுகூலமான தினங்கள்: 4, 5. 

  சந்திராஷ்டமம்: 7, 8.

  {pagination-pagination}
  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  சமுதாயத்தில் அந்தஸ்து படிப்படியாக உயரும். புதிய ரகசியங்களை அறிவீர்கள். செய்யும் தொழிலில் திட்டமிட்ட வெற்றியை அடைவீர்கள். புதிய நட்புகள் கூடும். மனதிலும் உடலிலும் உற்சாகம் பிறக்கும். உல்லாசப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

  உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் சந்தோஷமாக முடியும். வருமானமும் திருப்திகரமாகவே அமையும், சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். 

  வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக அமையும். பழைய கடன்கள் வசூலாகும். விவசாயிகளுக்கு விளைச்சலும் அவற்றின் விற்பனையும் அமோகமாக இருக்கும். புதிய குத்தகைகளை எடுக்க நினைப்பீர்கள்.

  அரசியல்வாதிகள் தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். சமூக சேவையில் புதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் பேராதரவைப் பெறுவீர்கள்.

  பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமை காண்பார்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். மாணவமணிகள் முயற்சிக்குத் தக்கபடி கல்வியில் முன்னேறுவார்கள். விளையாட்டில் வெற்றியுண்டு.

  பரிகாரம்: குரு தட்சிணாமூர்த்தியை மஞ்சள் மலர் கொண்டு அர்ச்சிக்கவும். 

  அனுகூலமான தினங்கள்: 5, 7. 

  சந்திராஷ்டமம்: 9, 10.

  {pagination-pagination}
  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  எடுத்த காரியங்கள் அனைத்தும் எதிர்பார்த்த முடிவைக்கொடுக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பெயரும் புகழும் அதிகரிக்கும். ஆனாலும் சில குழப்பங்களுக்கும் ஆளாவீர்கள். உடல் நலத்திலும் போதிய அக்கறை காட்டவும்.

  அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் கவனமாக இருக்கவும். தொண்டர்களிடம் நல்லவிதமாகப் பழகி அவர்களின் உதவிகளைப் பெறவும். வியாபாரிகள் படிப்படியாக முன்னேற்றம் காண்பார்கள். கூட்டாளிகளிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பைப் பெறுவார்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை செலுத்தவும். அரசாங்க மான்யம் கிடைக்கும்.

  அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் கவனமாக இருக்கவும். தொண்டர்களிடம் நல்லவிதமாகப் பழகி அவர்கள் உதவியைப் பெறலாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். யாருடனும் கூட்டு வேண்டாம். 

  பெண்மணிகளுக்கு நெருங்கியவர்களிடம் விரோதம் ஏற்படலாம். மௌனம் பல நேரங்களில் நன்மை பயக்கும். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய மொழிகளைக் கற்க ஆசைப்படுவீர்கள். 

  பரிகாரம்:  குலதெய்வ வழிபாடு செய்தும், விநாயகரை அருகம்புல் கொண்டு வணங்கியும் வரவும்.

  அனுகூலமான தினங்கள்:  5, 8.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  பெரிய திருப்பங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் பணவரவு சீராக இருக்கும். எடுத்த காரியங்களைச் சற்று இழுப்பறியுடன்தான் முடிக்க முடியும். சிலருக்கு வண்டி வாங்கும் யோகம் கிட்டும். குடும்பத் தலைவரின் உடல் நிலையில் சிறிது பாதிப்பு ஏற்படலாம்.

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வேலைகளை செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலையும் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே எடுக்கவும். விவசாயிகளுக்கு கொள்முதல் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். விவசாயத்தில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். 

  அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த வளர்ச்சியை அடைவீர்கள். 

  பெண்மணிகளுக்கு இல்லத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகளின் வருங்காலக் கனவுகளும் திட்டங்களும் உழைப்பிற்கேற்றவாறு பலிக்கும்.

  பரிகாரம்:  சனியன்று சனிபகவானை தீபமேற்றி வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்:  5, 6. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  மனதிற்கினிய செய்திகள் வந்து சேரும். பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறையும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். மனதிற்கினிய செய்திகள் வந்து சேரும். எதிரிகளாலும் நன்மை அடைவீர்கள்.

  உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். மனதை அரித்து வந்த பிரச்னைகள் விலகும். வேலையில் நிலவி வந்த கெடுபடிகள் குறையும். வியாபாரிகளைத் தேடி எதிர்பார்த்த லாபம் வரும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். 

  விவசாயிகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருமானத்தைப் பெருக்கவும். கால்நடைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிக்கவும். 

  அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். கோரிக்கைகளை தலைமையிடம் கூறிவிட்டு அமைதி காக்கவும். கலைத்துறையினருக்கு உயர்ந்தவர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

  பெண்மணிகளுக்கு நல்லது கெட்டது இரண்டும் சேர்ந்து வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற மேற்கொள்ளும் பயிற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். விளையாட்டிலும் சாதனை புரிவீர்கள்.

  பரிகாரம்:  செந்திலாண்டவரை விளக்கேற்றி வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்:  4, 5. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  பொருளாதாரம் மேம்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் முக்கியமான குறிக்கோளைச் சாதிக்கும் எண்ணம் வலுப்படும். கவலைகள் மறைந்து இன்பங்கள் பெருகும். மதிப்பு மரியாதை உயரும். உற்றார் உறவினர்களிடம் ஆதரவு கிடைக்கும். 

  உத்தியோகஸ்தர்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும் காலமிது. வேலைகளைத் தக்க நேரத்தில் முடித்துக் கொடுத்து மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு மனதில் குழப்பங்கள் சூழும். அவசியமான செலவுகளுக்கு கடன்கள் வாங்க நேரிடும். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட விவசாயப் பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். 

  அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் படிப்படியாகப் பலனளிக்கும்.  கலைத்துறையினருக்கு சாதகமான காலமாகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். புதிய வடிவத்தில் படைப்புகள் அளித்து பாராட்டுப் பெறுவீர்கள்.

  பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மாணவமணிகள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள். கல்வியிலும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறுவார்கள். 

  பரிகாரம்: கந்தசஷ்டி பாராயணம் செய்வதும், பித்ருக்களை ஆராதிப்பதும் நல்லது. 

  அனுகூலமான தினங்கள்: 6, 7. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  பெரியோர்களின் ஆசியைத் தேடிப் பெறவும். வேலைகளை எப்பாடுபட்டேனும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக நடந்துகொள்வார்கள். பேச்சில் விவேகத்தைக் கூட்டிக் கொள்ளவும்.

  உத்தியோகஸ்தர்கள் மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டு வேலைகளை முடிக்கவும். சக ஊழியர்களை அரவணைத்துச் செல்லவும். வியாபாரிகளைத் தேடி, வரவேண்டிய பணம் வந்து சேரும். கடின உழைப்பால் வருமானத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவர். 

  அரசியல்வாதிகள் மக்கள் நலப் பணிகளில் ஈடுபடுவீர்கள். புகழும் பெயரும் செல்வாக்கும் அதிகரிக்கும். கலைத்துறையினர் கடின முயற்சிக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் பெறுவர். பயணங்களால் பணவரவு உண்டு. பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகள் வழியில் திடீர் செலவுகள் உண்டாகும். 

  மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். 

  பரிகாரம்: திருநள்ளாறு சென்று சனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 7, 8. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

   {pagination-pagination}
  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உடன்பிறந்தோரும் ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் தாண்டவமாடும். எதிரிகளும் நேசக்கரம் நீட்டுவர்.

  உத்தியோகஸ்தர்களுக்கு மனதை அரித்து வந்த பிரச்னைகள் விலகும். மேலதிகாரிகள் உங்கள் சமயோசித புத்தியைப் பாராட்டுவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுகமான நிலைமை உருவாகும். கூட்டுத் தொழிலில் ஒற்றுமை ஓங்கும். விவசாயிகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருமானத்தைப் பெருக்கவும். கால்நடைகளை கவனமுடன் பராமரிப்பது நல்லது.

  அரசியல்வாதிகள் கட்சிப் பிரசாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மேலிடத்தின் பாராட்டைப் பெறுவார்கள். எதிரிகளிடம் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினர் தொழிலில் புதிய வளர்ச்சியைக் காண்பார்கள். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமை பாராட்டுவர். ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வர். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வீர்கள். 

  மாணவமணிகள் விடாமுயற்சியால் வெற்றி அடைவார்கள். பெற்றோரிடம் அனுசரித்துச் செல்லவும்.

  பரிகாரம்: சனியன்று பெருமாளை வழிபட்டு சிறப்புடன் வாழுங்கள்.

  அனுகூலமான தினங்கள்: 8, 9. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  உங்கள் ஆற்றல் வெளிப்படும். எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். முயற்சிகள் வெற்றி அடைவதில் தடங்கல்கள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். உடன்பிறந்தோர் வழியில் சற்று ஆதரவு குறையும்.

  உத்தியோகஸ்தர்கள் மனதை ஏதோ ஒரு குழப்பமான நிலையிலேயே வைத்துக் கொண்டு பணிபுரிவார்கள். மேலிடத்திலிருந்து உரிய பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரிகள் மன அழுத்தத்திற்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகும். ஆனால் கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். விவசாயிகள் புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவர். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். 

  அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுவீர்கள். புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். கடன் வாங்கி வேலைகளைச் செய்ய வேண்டாம். கலைத்துறையினர் கடின முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் பெறுவர்.பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மாணவமணிகள் படிப்பில் அக்கறை மேற்கொண்டு பாடங்களை படிக்கவும். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடவும்.

  பரிகாரம்:  விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை, அருகம்புல் மாலை சாற்றி வணங்கவும். 

  அனுகூலமான தினங்கள்:  7, 8. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  கவலைகள் நீங்கும். எடுத்த காரியங்களில் படிப்படியான வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் பணவரவுக்குக் குறைவு இருக்காது. சொல்வன்மையினால் எதிரிகளையும் சாதுர்யமாகக் கவர்வீர்கள். பெற்றோர் வழியில் சிறு குழப்பங்கள் உண்டாகும்.

  உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் பெறுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் சிறிது இடையூறுகள் தோன்றி பின் விலகும். காலதாமதமானாலும் திட்டமிட்ட பணிகள் சாதகமாக முடியும். விவசாயிகளுக்கு கையிருப்புப்பொருள்கள் மீது அக்கறை அதிகரிக்கும். 

  அரசியல்வாதிகள் தொண்டர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வார்கள். கட்சி மேலிடத்தின் பார்வையிலிருந்து ஒதுங்கிஇருக்கவும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே கிடைக்கும். புதிய வாய்ப்புகள் பெற போட்டியிட வேண்டியிருக்கும். 

  பெண்மணிகளுக்கு நல்லதும் கெட்டதும் கலந்தே வரும். ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.

  பரிகாரம்:  வெள்ளியன்று மகாலட்சுமியை தீபமேற்றி வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்:  8, 9.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai