Enable Javscript for better performance
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா- Dinamani

சுடச்சுட

    

    திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா

    By DIN  |   Published on : 06th October 2019 04:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cgltkm

    திருக்கழுகுன்றம் வேதமலை வல இருமுடிப்பெருவிழா குழுவினர் சார்பில் திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன (படம்).
     திருக்கழுகுன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் வேதமலை வல இருமுடிப்பெருவிழா குழுவினர் சார்பில் 12-ஆம் ஆண்டு நவராத்திரி பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
     முன்னதாக கோபூஜை, சுமங்கலி பூஜைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து 9 நாள்களும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
     இந்நிலையில், கோயில் வளாகத்தில் பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
     விழா ஏற்பாடுகளை அகஸ்தியஸ்ரீ அன்புச்செழியன் தலைமையில் கோயில் செயல் அலுவலர் குமரன், வேதமலை வல இருமுடிப்பெருவிழா குழு தலைவர் தி.க.துரை, செயலர் தி.க.து.அன்புச்செழியன், பாஸ்கரன், மோகன், டி.சி.வேதகிரி உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai