திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா

திருக்கழுகுன்றம் வேதமலை வல இருமுடிப்பெருவிழா குழுவினர் சார்பில் திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா

திருக்கழுகுன்றம் வேதமலை வல இருமுடிப்பெருவிழா குழுவினர் சார்பில் திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன (படம்).
 திருக்கழுகுன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் வேதமலை வல இருமுடிப்பெருவிழா குழுவினர் சார்பில் 12-ஆம் ஆண்டு நவராத்திரி பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
 முன்னதாக கோபூஜை, சுமங்கலி பூஜைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து 9 நாள்களும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
 இந்நிலையில், கோயில் வளாகத்தில் பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
 விழா ஏற்பாடுகளை அகஸ்தியஸ்ரீ அன்புச்செழியன் தலைமையில் கோயில் செயல் அலுவலர் குமரன், வேதமலை வல இருமுடிப்பெருவிழா குழு தலைவர் தி.க.துரை, செயலர் தி.க.து.அன்புச்செழியன், பாஸ்கரன், மோகன், டி.சி.வேதகிரி உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com