தூப்புல் வேதாந்த தேசிகர் கோயிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில் தெருவில் உள்ள தூப்புல் வேதாந்த தேசிகர் திருக்கோயிலில் வார்ஷீக மகோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தூப்புல் வேதாந்த தேசிகர் கோயிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில் தெருவில் உள்ள தூப்புல் வேதாந்த தேசிகர் திருக்கோயிலில் வார்ஷீக மகோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
 தூப்புல் வேதாந்த தேசிகர் கோயிலில் ஆண்டு தோறும் வார்ஷீக மகோற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த செப். 29-இல் தொடங்கியது.
 தினசரி காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் வெவ்வேறு வாகனத்திலும் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 இதன் தொடர்ச்சியாக புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் தேசிகர் சுவாமிகள் நகரின் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு ராமர் திருக்கோலத்தில் திருவீதியுலா நடந்தது.
 இதையடுத்து, வரும் செவ்வாய்க்கிழமை விளக்கொளி பெருமாள் மங்களாசாஸனமும், பின்னர் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு தங்கப்பல்லக்கில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
 அக். 9-ஆம் தேதி கந்தப்பொடி வசந்தம் மற்றும் விமான உற்சவ சேவை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் ஏ.சரவணன், ஸ்ரீவிளக்கொளி தூப்புல் வேதாந்த தேசிகர் சரவண அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com