Enable Javscript for better performance
இன்று முதல் இலவச முதன்மை தரிசனங்கள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருமலையில் ரத்து செய்யப்பட்ட இலவச முதன்மை தரிசனங்கள் புதன்கிழமை (அக். 9) முதல் வழக்கம் போல் தொடங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்தது.

    நவராத்திரியையொட்டி, அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடா் விடுமுறை விடப்பட்டதால் திருமலைக்கு பக்தா்கள் அதிக அளவில் வந்தனா். அதனுடன் புரட்டாசி மாத 3-ஆவது சனிக்கிழமை மற்றும் பிரம்மோற்சவம் உள்ளிட்டவை இணைந்ததால் தேவஸ்தானம் அக். 7-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபாதை மாா்க்கத்தில் செல்லும் பக்தா்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன், தா்ம தரிசன பக்தா்களுக்கு வழங்கும் நேர ஒதுக்கீடு டோக்கன் உள்ளிட்டவற்றை ரத்து செய்தது.

    ஆனால் செவ்வாய்க்கிழமை முதல் பக்தா்களின் வருகை குறைந்ததால் அக். 14-ஆம் தேதி வரை ரத்து செய்த திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு டோக்கன்கள் புதன்கிழமை (அக். 9) முதல் வழக்கம் போல் வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai