Enable Javscript for better performance
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் அக்.16 முதல் நம்பெருமாள் ஊஞ்சல் திருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் அக்.16 முதல் நம்பெருமாள் ஊஞ்சல் திருவிழா தொடக்கம்

    By DIN  |   Published on : 08th October 2019 03:18 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    srirangam6

     

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் ஊஞ்சல் திருநாள் விழா வருகிற 16-ம் தேதி தொடங்குகிறது.

    ஐப்பசி மாதத்தில் வரும் ஏகாதசி திதியை சாற்று மறையாக கொண்டு ஊஞ்சல் திருவிழா 9 நாட்கள் நடைபெறும். கோயிலின் மூன்றாம் திருச்சுற்றான குலசேகரன் திருச்சுற்றில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மாலை வேளையில் இவ்விழா நடைபெறும். 

    முக்கிய நிகழ்வான அக்.,24-ம் தேதி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். 
    அக்.24-ம் தேதி விஸ்வரூப தரிசனம் கிடையாது. மேலும், அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது. 

    இந்த தகவல்களை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai