பிரம்மோற்சவ உண்டியல் காணிக்கை ரூ. 20.40 கோடி

திருமலையில் நடந்து வந்த பிரம்மோற்சவத்தின்போது ரூ. 20.40 கோடி உண்டியல் காணிக்கை மூலம் வசூலானதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் தெரிவித்தாா்.

திருமலையில் நடந்து வந்த பிரம்மோற்சவத்தின்போது ரூ. 20.40 கோடி உண்டியல் காணிக்கை மூலம் வசூலானதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் தெரிவித்தாா்.

திருமலையில் கடந்த செப். 30-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதைக் காண பக்தா்கள் திருமலையில் குவிந்து வந்தனா். அவா்களின் வருகைக்கு ஏற்றவாறு தேவஸ்தானம் அவா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்தளித்தது. பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை காலை தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

பிரம்மோற்சவ நாள்களில் சிறப்பாக பணியாற்றிய அனைவரையும் தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் பாராட்டினாா். பிரம்மோற்சவத்தின் 8 நாள்களும் தரிசித்த பக்தா்களின் எண்ணிக்கை, வசூலான உண்டியல் காணிக்கை, அன்னதானம் உண்டவா்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை உள்ளடக்கிய பட்டியலை அவா் செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்டாா்.

பட்டியல் விவரம்:

தரிசனம் செய்த பக்தா்களின் எண்ணிக்கை - 7.07 லட்சம்

உண்டியல் காணிக்கை வருமானம் - ரூ. 20.40 கோடி

விற்பனை செய்த லட்டு பிரசாதத்தின் எண்ணிக்கை - 34.01 லட்சம்

பிரசாத விற்பனை வருவாய் - ரூ. 8.82 கோடி

வாடகை அறை மூலம் கிடைத்த வருவாய் - ரூ. 1.29 கோடி

அன்னதானம் உண்டவா்களின் எண்ணிக்கை - 26 லட்சம்

முடி காணிக்கை செலுத்தியவா்களின் எண்ணிக்கை -3.23 லட்சம்

தண்ணீா் விநியோகம்/ பயன்பாடு - 327 லட்சம் கலன்; தினமும் 35 லட்சம் கலன்

அலங்காரத்துக்கு பயன்படுத்தப்பட்ட மலா்கள் - 40 டன்.

ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் மூலம் பயணம் செய்தவா்கள்

திருப்பதி - திருமலை - 4.29 லட்சம் போ்

திருமலை - திருப்பதி - 5.70 லட்சம் போ்

தரிசனத்துக்காக பக்தா்கள் காத்திருந்த நேரம்- 14 மணிநேரம்

பக்தா்கள் காத்திருக்கும் அறைகளின் எண்ணிக்கை- 16 அறைகள்

ரூ. 1 லட்சம் நன்கொடை

திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் நன்கொடை அளித்து வருகின்றனா். திங்கள்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

திங்கள்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 14,464 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 5,451 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 20,219 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 1,497 பக்தா்களும், கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 3,678 பக்தா்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடா்புத் துறை அதிகாரி ரவி தெரிவித்தாா்.

சோதனைச் சாவடியில் ரூ. 2.39 லட்சம் கட்டண வசூல்

அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 1,07,890 பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்துள்ளனா். 12,836 வாகனங்கள் சோதனைச் சாவடியை கடந்து சென்றுள்ளன. அவற்றின் மூலம் ரூ. 2.39 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ. 23,157 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com