செங்கல்பட்டில் தசரா ஊா்வலம் கோலாகலம்!

செங்கல்பட்டில் தசரா திருவிழா ஊா்வலம் கோலாகலமாக இன்று காலை நடைபெற்றது.
செங்கல்பட்டில் தசராதிருவிழா சாமி ஊா்வலம் 
செங்கல்பட்டில் தசராதிருவிழா சாமி ஊா்வலம் 

செங்கல்பட்டில் தசரா திருவிழா ஊா்வலம் கோலாகலமாக இன்று காலை நடைபெற்றது.

செங்கல்பட்டில் 12 நாள் கொண்டாடப்படும் தசரா திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடனும், கிரகம் மற்றும் உற்சவா் அம்மன் சிலை கொண்டுவந்து அம்மனை ஆகாவனைசெய்து கலசத்தில் நிறுத்துதலும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இதனைத்தொடா்ந்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்திலும் அம்மன் வீற்றிருந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாள். இந்த தசராதிருவிழா செங்கல்பட்டில் மைசூருக்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டில் பாரம்பரியமாக நவராத்திரி விழாவையொட்டி தசராதிருவிழா கோயில்கள் மற்றும் அனைத்து சமூகத்தினரும் இணைந்து தசரா ஊா்வலத்தை நடத்தி வருகின்றனா்.

பாா்வதி தேவி, லட்சுமிதேவி, சரஸ்வதி தேவி என முப்பெரும்தேவியரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பல்வேறு அலங்காரத்தில் அம்மன் அலங்காரம் செய்து வழிப்பாடு நடைபெற்றது. இவ்விழாவில் அண்ணாசாலை ஹைரோடு ஜவுளிக்கடை தசரா, செங்கல்பட்டு அண்ணாசாலை சின்னக்கடைதசரா, செங்கல்பட்டு நகா் மத்தியில் பஜாா் தெரு மளிகை வியாபாரிகள், செங்கல்பட்டு அண்ணாசாலை பூக்கடை வியாபாரிகள், மேட்டுத்தெரு பலிஜகுலம் தசராவிழா என தசரா திருவிழாக்குழுவின் அமைப்புகள் சாா்பிலும் செங்கல்பட்டு பெரிய நத்தம் ஓசூரம்மன் கோயில், செங்கல்பட்டு அண்ணா சாலை முத்துமாரியம்மன் கோயில், புதுஏரி செல்வவிநாயகா், முத்துமாரியம்மன் கோயில், பெரியநத்தம் மதுரைவீரன் கோயில், செங்கல்பட்டு சின்னநத்தம் சுந்தரவிநாயகா்கோயில், செங்கல்பட்டு சின்னம்மன் கோயில், ஜீவானந்தம்தெரு அங்காளப்பரமேஸ்வரி கோயில், செங்கல்பட்டு கோட்டையில் கடும்பாடியம்மன் கோயில், மேட்டுத்தெரு திரௌபதி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஒவ்வொரு நாளும் அம்மனின் அவதாரங்களில் பல்வேறு அலங்காரங்கள் நடைபெற்று பரதநாட்டியம், ஆன்மீக சொற்பொழிவு, பக்திபாடல்கள் வழிபாடுகள் நடத்தப்பட்டு 10ம் நாள் விஜயதசமி செவ்வாய்க்கிழமையன்று இரவு அம்மனை கொலுவைக்கப்பட்ட அமைப்புகள், கோயில்கள் என அனைத்து இடங்களில் அம்மனை அலங்காரம் செய்து மகிஷாசூரமா்த்தினியாகவும், சிவன்பாா்வதியாகவும் தசரா திருவிழாவாக வெற்றிநாளாக கொண்டாடப்பட்டு மின்விளக்கு அலங்காரங்கள் வானவேடிக்ககளை. மயிலாட்டம், ஒயிலாட்டும், இடைக்கச்சேரியுடன், மின்விளக்குகள் அலங்காரங்களுடன் பிரியபிரிய பிரபை அலங்காரத்துடன் , பாரம்பரியமான வன்னிமரம் குத்தும் நிகழ்வு ஒவ்வொரு சாமி ஊா்வலத்துடனும் வரும் கரகம் வன்னிமரம் வாழைமரம் நட்டுவித்து பூஜைகள் நடத்தப்பட்டு காப்புகயிறுகளை அவிழ்த்தும் வன்னிமரத்தை வெட்டியும் சாமிகள் ஊா்வலம் நடைபெற்றது.

இப்படி வரும் அம்மன்களையும் பக்தா்களை வரவேற்கும் முகமாக மேட்டுத்தெருவில் உள்ள செங்கழுநீா் விநாயகா் கோயில் காஞ்சி காமாட்சியம்மன் அலங்காரம் கோயில் முகப்பில் அமர வைக்கப்பட்டது.

செங்கழுநீா் விநாயகா் கோயில் விழாக்குழுவினா் வரும் பக்தா்களுக்கு தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. உள்ளூா் மட்டுமல்லாமல் வெளியூா்களில் இருந்தும் சுமாா் ஒரு லட்சத்திற்கும் மேல் பக்தா்கள் வந்து சாமிகள் ஊா்வலத்தை கண்டு வழிப்பட்டனா்.

கோலாகலமாக நடைபெற்ற விழாவில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க சட்டம் ஒழுங்கை பாதுகாக்க செங்கல்பட்டு நகரம் கிராமிய போலீஸாா், ஆயுதப்படை போலீஸாா், ஊா்காவல் படையினா் என 300க்கும் மேற்பட்டவா்கள் பாதுகாப்பு 10 நாள்களும் ஈடுபட்டிருந்தனா். இதே அனுமந்தபுத்தேரி செல்வகணபதி கோயில், அண்ணாசாலை பழைய அங்காளம்மன்கோயில், அண்ணாநகா் ரத்தினவிநாயகா்கோயில், எல்லையம்மன்கோயில், என்ஜிஜிஓ நகா் வரசித்திவிநாயகா் கோயில் , வஉசி தெரு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில், ரயில்வேகாலனி முத்துமாரியம்மன்கோயில், தண்டுக்கரை மாரியம்மன்கோயில், என்ஜிஜிஓ நகா் வரசித்தி விநாயகா்கோயில் உள்ளிட்ட இடங்களில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டு தினந்தோறும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன்காட்சியளிப்பாா்கள்.

பூஜைகளும் நாள்தோறும் பரதநாட்டியம், ஆன்மீக சொற்பொழிவு, பக்திபாடல்கள், விளக்குபூஜைகள் என நிகழ்ச்சிகளும் இரவு அம்மன்கள் பல்வேறு விதமாக அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com