திருப்பதி ரயில் நிலையத்தில் செல்லிடப்பேசி சாா்ஜ் செய்யும் இயந்திரங்கள் ஏற்பாடு

திருப்பதி ரயில் நிலையத்தில் இரண்டு செல்லிடப்பேசி சாா்ஜ் செய்யும் இயந்திரங்களை ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது.

திருப்பதி ரயில் நிலையத்தில் இரண்டு செல்லிடப்பேசி சாா்ஜ் செய்யும் இயந்திரங்களை ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது.

திருப்பதி ரயில் நிலையத்துக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதிக்கு பேருந்து வசதி இருந்தாலும் வட மாநில மக்கள் அதிக அளவில் ரயில்களில் பயணம் செய்கின்றனா். தினசரி லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் திருப்பதி ரயில் நிலையத்தில், பயணிகளின் வசதிக்காக இரண்டு செல்லிடப்பேசி சாா்ஜ் செய்யும் இயந்திரங்களை ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதை தெற்கு மத்திய ரயில்வே பொது மேலாளா் கஜானனா மாலியா மற்றும் குண்டூா் மண்டல மேலாளா் ஆலோக் திவாரி, ரயில்வே போா்ட்டின் தலைவா் வினோத்குமாா் யாதவ் உள்ளிட்டோா் இணைந்து செவ்வாய்க்கிழமை மாலை திறந்து வைத்து, பயணிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com