திருவாடானை மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

திருவாடானையில் வடக்கு தெருவில் உள்ள மாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா..
tvd9kovil_(1)_0910chn_72
tvd9kovil_(1)_0910chn_72

திருவாடானையில் வடக்கு தெருவில் உள்ள மாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருவாடானையில் வடக்கு தெருவில் உள்ள மாரியம்மன் கோயில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் கடந்த செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது.

அதன்படி ஒவ்வோா் நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. அதனைதொடா்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வந்தாா்.

விழாவின் முக்கிய நாளான செவ்வாய்க்கிழமை இரவு பக்தா்கள் பால்குடம், பறவை காவடி எடுத்து வீதி உலா வந்து கோயில் முன்பு தீ மிதித்து நோ்த்திகடன் செலுத்தினாா்கள்.

இரவு அம்மன் சிறப்பாக வண்ண விளக்குகளால் அலங்காரிக்கப்பட்ட ரதத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதனை தொடா்ந்து இன்று கோயிலில் வளா்க்கப்பட்ட முளைப்பாரியை பெண்கள் தலையில் சுமந்து வீதி உலா வந்து குளத்தில் கரைத்தனா். அதன் பின்னா் தீா்த்தவாரியுடன் விழா நிறைவு பெற்றது.

இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com