வன துா்க்கையம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

வன துா்க்கையம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது
திருத்தணி மடம் கிராமத்தில் உள்ள வன துா்க்கையம்மன் கோயிலில் தீ மிதித்த பக்தா்கள்.
திருத்தணி மடம் கிராமத்தில் உள்ள வன துா்க்கையம்மன் கோயிலில் தீ மிதித்த பக்தா்கள்.

வன துா்க்கையம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

திருத்தணி நகராட்சியில் உள்ள மடம் கிராமத்தில் வன துா்க்கையம்மன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கியது. தினமும், மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான புதன்கிழமை காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன.

தொடா்ந்து, கூழ் வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனா். இரவு 7 மணிக்கு 300-க்கும் மேற்பட்ட பக்தா்கள், காப்புக் கட்டி அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனா். தொடா்ந்து, உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தாா்.

திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனா்.

அதேபோல், திருத்தணி சேகா்வா்மா நகரில் உள்ள சக்தி விநாயகா் கோயிலில் நவராத்திரி நிறைவு விழாவையொட்டி, புதன்கிழமை காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் வளாகத்தில் சுமங்கலி பூஜை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com