Enable Javscript for better performance
weekly prediction | வார பலன்கள்- Dinamani

சுடச்சுட

  
  prediction

  12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (அக்டோபர் 11 - அக்டோபர் 17) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  மனதிலிருந்த குழப்பங்கள் விலகித் தெளிவுகள் தென்படும். எல்லா செயல்களும் திட்டமிட்ட படியே நடக்கும். குடும்பத்தில் மதிப்பு உயரும். உறவினர்கள் உங்கள் பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள். உடன்பிறந்தோர் வகையில் சிறு மனஸ்தாபம் ஏற்படும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். விரும்பத் தகாத இடமாற்றங்கள் ஏற்படும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல்களைச் சந்திப்பீர். கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகள் சலிப்பில்லாமல் உழைத்தால் பலன்களைப் பெறலாம். புதிய குத்தகை முயற்சிகளில் இறங்க வேண்டாம்.

  அரசியல்வாதிகள் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமிது. திட்டமிட்ட வேலைகள் நிறைவேற தொண்டர்களின் ஆதரவைப் பெறவும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவிப்போகும். பெண்மணிகள் புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் எண்ணத்தைத் தள்ளிப்போடவும். மாணவமணிகள் படிப்பில் போதிய கவனம் செலுத்தவும். பெற்றோர், ஆசிரியர் சொற்படி நடக்கவும். 

  பரிகாரம்: ராகுகால துர்க்கைக்கு விளக்கேற்றி செவ்வரளி சாற்றி வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 11, 12.  

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். சிறப்புகள் கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். உழைப்புக்கேற்ற பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் போட்டி பொறாமையை சந்திக்க நேரிடும். கூட்டாளிகள் அனுகூலமாக இருப்பார்கள். விவசாயிகளுக்கு மகசூல் சுமாராகவே இருக்கும். புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். 

  அரசியல்வாதிகள் கவனமாகச் செயல்படவும். மக்களுக்கான போராட்டங்களில் மட்டுமே கலந்து கொள்ளவும். சம்பந்தமில்லாத செயல்களில் ஈடுபட வேண்டாம். 

  கலைத்துறையினர் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். பெண்மணிகள் தம் கணவருடன் ஒற்றுமையோடு இருப்பர். உறவினர் மற்றும் நண்பர்களிடம் கவனமாக இருக்கவும். மாணவமணிகள் கடுமையாக முயற்சி செய்தால் எல்லா தடைகளையும் உடைத்து வெற்றிவாகை சூடலாம்.

  பரிகாரம்: வெள்ளியன்று மகாலட்சுமிக்கு தீபமேற்றி வழிபட நலன்கள் கூடும். 

  அனுகூலமான தினங்கள்: 11, 13. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  குடும்பத்தில் சிரமங்கள் குறைந்து மகிழ்ச்சி நிறையும். சுப காரியங்கள் கைகூடும். வழக்கு விஷயங்கள் நல்லபடியாக முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழிலில் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அவநம்பிக்கைகள் அகலும். மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் வகையில் நடந்துகொள்வீர்கள். வியாபாரிகளுக்கு இது லாபகரமான காலமாகும். குறைந்த முதலீட்டில் மேலும் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். விவசாயிகளுக்கு விளைச்சல் நல்லபடியாக அமையும். சிறிய முதலீட்டில் புதிய நிலங்களை வாங்கலாம். 

  அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் வளரும். புதிய பதவிகள் தேடிவரும். பயணங்களால் நன்மை உண்டாகும். கலைத்துறையினருக்கு பாராட்டும் விருதுகளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் செய்வதில் சிறிது காலதாமதம் ஏற்படும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் ஆதரவு கிடைக்கும். கணவர் உங்களை மதித்து நடப்பார். பணவரவு தாராளமாக இருக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும்.  

  பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

  அனுகூலமான தினங்கள்: 11, 14.  

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  மனக்கவலைகள் குறையும். ஆரோக்கியம் சீராகும். பெயரும் புகழும் பெறுவீர்கள். உறவினர்கள் உதவி செய்ய முன் வருவார்கள். பொருளாதாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு செயல்வடிவம் கொடுப்பீர்கள். 

  உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி நட்புடன் நடந்துகொள்வர். பணவரவு சீராக இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நலமாக முடியும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மாற்றுப் பயிர்களை பயிர் செய்வதன் மூலம் மேலும் லாபத்தை அள்ளுவீர்கள்.

  அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளை ஏற்றுக் செயலாற்றி புகழடைவர். தொண்டர்களின் ஆதரவும் கிடைக்கும். பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கலைத்துறையினர் புகழும் பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.

  பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். குழந்தைகளின் உடல்நலனில் அக்கறை கொள்ளவும். மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும். எதிலும் கவனமாக இருக்கவும். 

  பரிகாரம்: துர்க்கையையும் சரபேஸ்வரரையும் வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 12,13. 

  சந்திராஷ்டமம்: 11. 

  {pagination-pagination}

  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார நிலையும் நன்றாகவே இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலங்கள் கிடைக்காது. திட்டமிட்ட வேலைகளில் சிறிது தாமதம் ஏற்படும். உஷ்ண உபாதைகளும் உண்டாகும். 

  உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனத்துடன் ஈடுபடவும். சக ஊழியர்களை நம்பி வேலைகளை ஒப்படைத்து பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். விவசாயிகளுக்கு மகசூல் திருப்திகமாக இருக்கும். எதிர்பாராத பண வரவால் பழைய கடன்களை பைசல் செய்ய நினைப்பீர்கள். 

  அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களில் தொய்வு நிலையை சந்திப்பார்கள். மேலிடத்தின் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் சற்று குறைந்தே காணப்படும். கலைத்துறையினர் எதிர்பார்த்த புகழும் பாராட்டும் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். 

  பெண்மணிகள் குடும்பத்தில் வீண் குழப்பங்களைச் சந்திக்க நேரிடும். மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்தவாறு மதிப்பெண்களைப் பெறுவார்கள். பாடங்களை உடனுக்குடன் படிக்கவும்.

  பரிகாரம்:  பெருமாள்} தாயாரை வெள்ளிக்கிழமைகளில் தீபமேற்றி வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 11, 15. 

  சந்திராஷ்டமம்: 12, 13.

  {pagination-pagination}
  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தேவைக்கேற்ப பணவரவு உண்டாகும். குடும்பத்தில் எதிர்பாராத செல்வுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். சுப நிகழ்ச்சிகள் சிறிய தடங்கலுக்குப்பின் நடக்கும். தெய்வபலத்தைக் கூட்டிக் கொள்ளவும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் பிடிப்பில்லாத சூழ்நிலை தென்படும். அனைத்து வேலைகளையும் நன்றாகவே முடித்து விடுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சாதகமாகவே முடியும். புதிய முதலீடுகளை கூட்டாளிகளிடம் கலந்தாலோசித்து செய்யவும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். 

  அரசியல்வாதிகள் எதிரிகளின் தந்திரங்களை எச்சரிக்கையுடன் கவனித்து வரவும். திட்டமிட்ட வேலைகளில் முன்கூட்டியே யோசித்துச் செயல்படவும். கலைத்துறையினருக்கு திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் உண்டாகும்.

  பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனமாக இருக்கவும். மாணவமணிகள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும்.

  பரிகாரம்:  காலபைரவரை வணங்கவும். நவக்கிரகங்களைச் சுற்றி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 13, 17.  

  சந்திராஷ்டமம்: 14, 15, 16.

  {pagination-pagination}
  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  தொழிலில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம், மனநிலை பலப்படும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எதையும் கவனத்துடன் கையாளவும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. 

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். மேலதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் தேடி வரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சமுகமாகவே முடியும். குறைந்த முதலீடுகளில் தொழிலை அபிவிருத்தி செய்யவும். விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாகவே இருக்கும். புதிய குத்தகைகள் எடுத்து லாபம் பெறலாம்.  

  அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளை திடத்துடன் செயல்படுத்துவார்கள். மேலிடத்தின் ஆதரவு இருப்பதால் புதிய பதவிகள் தேடிவரும். கலைத்துறையினருக்கு புகழும் நற்பெயரும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களையும் செய்வீர்கள். பெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக இருக்கும். பேச்சில் கவனம் தேவை. 

  கணவரிடம் சுமுகமான நிலை காணப்படும். மாணவமணிகள் ஆசிரியரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

  பரிகாரம்:  செவ்வாயன்று முருகப்பெருமானை வணங்கி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 14, 15.  

  சந்திராஷ்டமம்: 17.

  {pagination-pagination}
  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  பொருளாதாரத்தில் அபிவிருத்தி தென்படும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். தந்தை வழி சொத்தில் சிறு வில்லங்கம்  உண்டாகும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். அலுவலகப் பயணங்களால் நன்மை அடைவீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். பல சந்தைகளில் பொருள்களை விற்க முனைவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளாலும் லாபம் உண்டாகும். 

  அரசியல்வாதிகள் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். எதையும் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். புகழும் செல்வாக்கும் உயரும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் குறையும். மாற்றுவழியில் வருமானத்தைப் பெருக்குவீர்கள். 

  பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமையில் சில பாதிப்புகள் ஏற்படாலம். எனவே அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஆதரவு குறையும். கோரிக்கைகள் எதையும் அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டாம். 

  பரிகாரம்:  கந்தசஷ்டி பாராயணம் செய்யவும். குலதெய்வ வழிபாடு அவசியம். அனுகூலமான தினங்கள்: 12, 16.  சந்திராஷ்டமம்:  இல்லை.

  {pagination-pagination}
  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  நல்லவர்களிடம் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் எதிர்பார்த்த முடிவைக் கொடுக்கும். உறவினர்கள் பாரா முகம் காட்டுவார்கள் என்பதால் கவனம் தேவை.

  உத்தியோகஸ்தர்கள் அனைத்து காரியங்களிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவுடன் கோரிக்கைகளை நிறைவேறும். சக ஊழியர்களும் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக முடியும். புதிய முதலீடுகள் வெற்றியைத் தேடித் தரும். விவசாயிகளின் உடல் உழைப்புக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் அனைத்தும் பைசலாகும். 

  அரசியல்வாதிகளுக்கு கஷ்டங்கள் குறையும். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரவு தருவார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் புதிய பொறுப்புகள் தேடி வரும். கலைத்துறையினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். கைநழுவிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் தேடிவரும்.

  பெண்மணிகளுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் நல்ல பலன் பெறுவார்கள்.

  பரிகாரம்: சனியன்று சனிபகவானையும் வியாழனன்று தட்சிணா மூர்த்தியையும் வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 14, 16.  

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  உங்கள் பெயரும் புகழும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயணங்களால் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த மாற்றங்களை தொழிலில் காண்பீர்கள். குடும்பத்தில் அனைவரிடமும் பற்றும் பாசமும் அதிகரிக்கும். 

  உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ஒற்றுமையுடன் பழகவும். ஊதிய உயர்வு பெறும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளித்து சந்தையில் பொருள்களை விற்பனை செய்வார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளாலும் வருமானம் உண்டாகும். 

  அரசியல்வாதிகள் கட்சியில் புதிய பணிகளைப்  பொறுப்பேற்றுச் செய்வார்கள். உங்கள் மீது போடப்பட்டிருந்த வழக்குகள் சாதகமாகவே முடியும். கலைத்துறையினருக்கு நலன்கள் கூடும். உங்கள் புதிய திறமைகள் அரங்கேறும். 

  பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் பாசமும் அதிகரிக்கும். பொருளாதார நிலை வளமாக இருக்கும். மாணவமணிகள் புதிய விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றியடைவர். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும்.

  பரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமானை வணங்கி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 13, 17.  

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  வசதி வாய்ப்புகள் பெருகும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் படிப்படியான வெற்றி அடைவீர்கள். சுபச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு வேலைகளில் மனக்குழப்பம் ஏற்படும்.

  உத்தியோகஸ்தர்கள் விóரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் பெறுவார்கள். சக ஊழியர்களும்  உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு எல்லா தடைகளும் நீங்கும். லாபம் பெருகும். நண்பர்களின் ஒத்துழைப்புடன் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்கி லாபத்தைப் பெருக்குவீர்கள். கால்நடை பராமரிப்புச் செலவு சற்று கூடுதலாக இருக்கும். 

  அரசியல்வாதிகள் யாரிடமும் வீண் விரோதத்தை வளர்த்துக்கொள்ள வேண்டாம். தொண்டர்களின் ஆதரவுடன் உங்கள் எண்ணங்கள் ஈடேறும். கலைத்துறையினர் புகழும் பாராட்டுகளும் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள்.

  சக கலைஞர்களும் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். மௌனம் சாதிப்பது நலம். மாணவமணிகள் கடுமையாக முயற்சி செய்து கல்வியில் முன்னேறுவார்கள்.

  பரிகாரம்:  திங்களன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 12, 17. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  அளவுக்கு மீறின யோசனைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். செயல்களில் முக்கியத் திருப்பங்களைக் காண்பீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் நலம் தரும். தொடர்ந்து வந்த கவலைகள் நீங்கும். மனதில் நம்பிக்கை வளரும்.

  உத்தியோகஸ்தர்கள் வேலைகளைச் சரிவர புரிந்து கொண்டு கச்சிதமாக முடிக்க முயற்சி செய்யவும். சக ஊழியர்களின் ஆதரவு இருப்பதால் அனைத்தும் பிரச்னையின்றி முடியும். வியாபாரிகளுக்கு நல்ல முறையில் வியாபாரம் நடக்கும். 

  கொடுக்கல் வாங்கல்கள் படிப்படியாக முன்னேறும். விவசாயிகளுக்கு கொள் முதலில் நல்ல லாபம் கிடைக்கும். கால்நடைகளை வைத்திருப்போர் எதிர்பார்த்த வருமானத்தை அடைவர்.

  அரசியல்வாதிகளுக்கு திட்டமிட்ட வேலைகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். கலைத்துறையினர் பல தடைகளைத் தாண்டி புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெண்மணிகள் பொருளாதாரத்தில் அபிவிருத்தி காண்பார்கள். உங்கள் கோரிக்கைகள் குடும்பத்தில் உள்ளவர்களால் ஏற்கப்படும். மாணவணிகள் விளையாட்டில் ஈடுபட்டு பாராட்டுகள் பெறுவார்கள்.

  பரிகாரம்: துர்க்கையையும் முருகப்பெருமானையும் வணங்கி நலனைப் பெறவும். 

  அனுகூலமான தினங்கள்: 16, 17. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai