மணலி அய்யா வைகுண்ட தர்மபதி தேரோட்டம்

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி மாத திருவிழாவினையொட்டி திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மணலி அய்யா வைகுண்ட தர்மபதி தேரோட்டம்

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி மாத திருவிழாவினையொட்டி திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 சென்னையை அடுத்த மணலி புதுநகர் அய்யா வைகுண்டதர்மபதி புரட்டாசி மாத திருவிழா கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கியது. கடந்த பத்து நாள்களாக தினமும் காலை 6 மணிக்கு பணிவிடையும், மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், மாலை 5 மணிக்கு திருஏடுவாசிப்பும், நடைபெற்றது. ú
 மலும் ஒவ்வொரு நாளும் காளை வாகனம், அன்ன வாகனம், கருட வாகனம், மயில் வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், சர்ப்ப வாகனம், மலர்முக சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், பூம்பல்லக்கு வாகனம், மற்றும் இந்திர விமானங்களில் அய்யா வைகுண்டர் வீதி உலாவரும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
 விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு திருத்தேரில் அய்யா வைகுண்டர் வீதி உலா வரும் நிகழ்ச்சி தொடங்கியது. தர்மபதி நிர்வாகிகள், பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
 இதனைத் தொடர்ந்து வாண வேடிக்கைகள், சங்கு முழக்கம், நாகஸ்வர கச்சேரி, செண்டை மேளத்துடன் திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. சுமார் நான்கு மணியளவில் தேர் இருப்பிடம் திரும்பியது. விழாவினையொட்டி தொடர் அன்னதானம், வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் தர்மபதி நிர்வாகிகளும் போலீஸாரும் செய்திருந்தனர்.
 இவ்விழாவில், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், மக்களவை முன்னாள் உறுப்பினர் ஜெயதுரை, சமத்துவ மக்கள் கழகத் தலைவர் ஏ.நாராயணன், தர்மபதி நிர்வாகி தங்கப்பெருமாள், தேவதாஸ், வேலுசாமி, தங்கப்பழம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com