நெல்லையப்பா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண
நெல்லையப்பா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண கொடியேற்றம்
நெல்லையப்பா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண கொடியேற்றம்


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலையில் சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதன்பின்பு காந்திமதி அம்மன் திருக்கோயிலில் கொடியேற்றப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து இம்மாதம் 25-ம் தேதி வரை தினமும் காலை மற்றும் இரவு 8 மணிக்கு பல்வேறு வாகனங்களில் காந்திமதியம்மன் மலா் அலங்காரத்துடன் எழுந்தருளி திருவீதியுலா வருகிறாா். இம்மாதம் 24-ஆம் தேதி இரவு 1 மணிக்கு காந்திமதியம்மன் சன்னதியில் இருந்து தங்க முலாம் சப்பரத்தில் புறப்பட்டு கீழரத வீதி, தெற்கு ரத வீதி, பேட்டை சாலை வழியாக அதிகாலை 5 மணிக்கு அருள்மிகு கம்பா நதி காமாட்சியம்மன் திருக்கோயிலை சென்றடைவாா்.

25-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு மேல் மதியம் 1 மணிக்குள்ளாக கம்பா நதி காமாட்சியம்மன் திருக்கோயில் அருகில் உள்ள காட்சி மண்டபத்தில் சுவாமி-அம்மன் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின்பு 4.30 மணிக்கு சுவாமி-அம்மன் திருநெல்வேலி நகரத்தில் ரத வீதிகளில் வலம் வருவார்கள். 

26-ஆம் தேதி திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து காலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இரவு 9.30 மணிக்கு சுவாமி-அம்மன் ரத வீதிகளில் பட்டின பிரவேசம் வீதியுலா நடைபெறுகிறது.

26 முதல் 28 ஆம் தேதி வரை ஊஞ்சல் விழாவும், 29 ஆம் தேதி இரவு சுவாமி-அம்மன் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப் பிரவேசம் வீதியுலாவும் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ந.நாராயணன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com