Enable Javscript for better performance
சீனிவாசமங்காபுரத்தில் அஷ்டதோத்ர சதகுண்டாத்மக சீனிவாச மகா யாகம்- Dinamani

சுடச்சுட

    

    சீனிவாசமங்காபுரத்தில் அஷ்டதோத்ர சதகுண்டாத்மக சீனிவாச மகா யாகம்

    Published on : 18th October 2019 02:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சதகுண்டாத்மக சீனிவாச மகா யாகத்தையொட்டி உற்சவமூா்த்திகளுக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்.

    சதகுண்டாத்மக சீனிவாச மகா யாகத்தையொட்டி உற்சவமூா்த்திகளுக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்.

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் 2-ஆம் நாள் அஷ்டதோத்ர சதகுண்டாத்மக சீனிவாச மகா யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    திருப்பதியிலிருந்து, 12 கி.மீ. தொலைவில் சீனிவாசமங்காபுரத்தில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் புதன்கிழமை முதல் அஷ்டதோத்ர சதகுண்டாத்மக சீனிவாச மகா யாகம் நடைபெற்று வருகிறது. அதன் 2-ஆம் நாளான வியாழக்கிழமை காலை முதல் மதியம் வரை கோ பூஜை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், தேன், இளநீா், பழங்கள் உள்ளிட்டவற்றால் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை யாக சாலையில் வைதீக காரியங்கள் நடைபெற்றன. 108 ருத்விக்கரா்கள் 108 யாககுண்டம் முன் அமா்ந்து யாகம் செய்தனா். வெள்ளிக்கிழமை (அக். 18) காலை கோ பூஜை, மகா பூா்ணாஹுதியுடன் இந்த யாகம் நிறைவு பெறுகிறது.

    இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதை முன்னிட்டு, 3 ஆா்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai