Enable Javscript for better performance
weekly prediction (oct 18-oct 24)| வார பலன்கள்- Dinamani

சுடச்சுட

  

  இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது? வாங்க பார்க்கலாம்!

  Published on : 18th October 2019 06:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  prediction

  12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (அக்டோபர் 18 - அக்டோபர் 23) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  மந்தமாக நடந்து வந்த காரியங்கள் சுறுசுறுப்பாக முடியும். குடும்பத்தில் குழப்பங்கள் அகலும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மனக்குழப்பங்கள் ஏற்பட்டு அதிலிருந்து விடுபடும் நேரமிது.

  உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். வேலைப்பளுவை சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் குறைப்பீர்கள். வியாபாரிகளுக்கு சிக்கல்கள் விலகி சுமுகமான நிலைமை உருவாகும். வாடிக்கையாளர்கள் வந்த வண்ணமிருப்பர். விவசாயிகள் பயிர்விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளால் பலன் அதிகரிக்கும். 

  அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவார்கள். புதிய பயணங்களால் நன்மை அடைவீர்கள். கலைத்துறையினருக்கு முன்னேற்றகரமான காலமிது. புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். 

  பெண்மணிகள் ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உஷ்ண ஆதிக்க நோய்களால் கழுத்தில் முதுகில் வலி ஏற்படு
  வதற்கும் வாய்ப்பு உள்ளதால் உடல்நலத்தில் கவனம் தேவை. 

  மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். விளையாட்டிலும் வெற்றி பெறும் காலமிது. 

  பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கையம்மனை விளக்கேற்றி, செவ்வரளி சாற்றி வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 18,19. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  வெற்றிகள் எளிதாகத் தேடிவரும். குடும்பத்தினரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கவலைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் ஒரு பாதுகாப்பு அரணை ஏற்படுத்தித் தருவார்கள். சக ஊழியர்களின் ஆதரவும் நட்பும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். எதையும் எளிதில் செய்து முடித்து சாதனைப் படைப்பீர்கள். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். முயற்சிகளைத் தீவிரப்படுத்தினால் இருமடங்கு வருமானம் பெறலாம்.

  அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் கருணையுடன் நடந்துகொள்ளும். புதிய பொறுப்புகளில் நேர்த்தியாகச் செயல்பட்டு பதவி  உயர்வும் பாராட்டும் பெறுவீர்கள். 

  கலைத்துறையினர் சொந்த முயற்சியால் சில முக்கியமான ஒப்பந்தங்களைச் செய்வார்கள்.

  பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

  மாணவமணிகள் பெற்றோர்களின் ஆதரவுடன் விளையாட்டுகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.

  பரிகாரம்: குருவாயூரப்பனை வழிபடவும். விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம் செய்வது நல்லது.

  அனுகூலமான தினங்கள்: 18, 20.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  உங்கள் மதிப்பு மரியாதைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். சில நேரங்களில் எதையோ இழந்து விட்டது போன்ற மனக்கவலைகளுக்கு ஆளாவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். சக ஊழியர்கள் நட்போடு பழகுவார்கள். அலுவலக வேலைகளில் போதிய கவனம்  செலுத்தவும். வியாபாரிகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய காலமிது. கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும்.

  அரசியல்வாதிகள் பொது சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். மேலிடத்தின் பாராட்டைப் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு இது அனுகூலமான காலமாகும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பெண்மணிகளுக்கு பொருளாதாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை தென்படும். மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்தவும். மதிப்பெண்களைப் பெற அதிகமாக உழைக்கும் நேரமிது.

  பரிகாரம்: வியாழன்தோறும் குரு தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

  அனுகூலமான தினங்கள்: 19, 20. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  மனதிற்கு நிம்மதி தரும் செய்திகளைக் கேட்பீர்கள். செலவுகள் கூடும். உற்றார் உறவினர்களால் நன்மை குறையும். எதிலும் அவசரப் படாமல் நிதானமாக செயல்படவும். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் சீராக இருக்கும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களிடம் எச்சரிக்கை தேவை. வேலைப்பளு இருந்தாலும் உழைப்பிற்கேற்ற பலனுண்டு. விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்பில்லை. வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரம் நல்லபடியாக முடியும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவர். விவசாயிகள் பூச்சி மருந்திற்காக செலவுகள் செய்ய நேரிடும். கடன்களால் சில வழக்கு விவகாரங்கள் உருவாகும். 

  அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உள்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினரைத் தேடி புதிய ஒப்பந்தங்கள் தாமதமாக வந்து சேரும். சக கலைஞர்களின் உதவி கிடைக்காது. 

  பெண்மணிகள் ஆடை, ஆபரணங்கள் வாங்கும் ஆசையை குறைத்துக் கொள்ளவும். கணவருடனான உறவு சுமுகமாக இருக்கும். மாணவணிகள் விளையாடும் நேரத்தில் கவனமுடன் இருக்கவும். 

  பரிகாரம்: ஞாயிறன்று ராகு காலத்தில் சரபேஸ்வரரை அர்ச்சனை செய்து வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 18, 21.

  சந்திராஷ்டமம்: இல்லை.

   {pagination-pagination}
  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  தைரியத்துடன் சாகசங்களைச் செய்வீர்கள். வரவுக்குத் தகுந்த செலவுகள் ஏற்படும். எதிர்பாராத குழப்பங்கள் வந்து சேரும். உடல்நலத்திலும் அக்கறை எடுத்துக் கொள்ளவும். உற்றார் உறவினர்கள் அனுசரணையுடன் நடந்துகொள்வார்கள். 

  இதையும் படிக்கலாமே: கோயிலுக்குச் செல்பவர்கள் கட்டாயம் இதையெல்லாம் செய்யவே செய்யாதிங்க!

  உத்தியோகஸ்தர்கள் இடைவிடாமல் உழைக்க வேண்டி வரும். கோரிக்கைகள் நிறைவேறத் தாமதமாகும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். வியாபாரிகளுக்கு எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். அரசு வழியில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். விவசாயிகளுக்கு உங்கள் வருமானத்தை பங்கு போட வருபவர்களிடம் எச்சரிக்கை தேவை. 

  அரசியல்வாதிகளைத் தேடி உயர்ந்த பதவிகள் வந்து சேரும். கட்சி மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும். சிரமம் ஏற்பட்டாலும் வழக்குகள் சாதகமாகவே முடியும். 

  கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் செய்வார்கள். எதிர்பார்த்த புகழும் பாராட்டுகளும் கிடைக்கத் தாமதமாகும். பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சிகரமான காலமாகும். புத்தாடை அணிகலன்களை வாங்கி மகிழ்வார்கள். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள்.

  பரிகாரம்: விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைப்பதும் அருகம்புல், வெள்ளருக்கு மாலை அணிவிப்பதும் உகந்தது. 

  அனுகூலமான தினங்கள்: 19, 21.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  பணவரவு சிறப்பாக இருக்கும். வீட்டிற்குத் தேவையானவற்றை வாங்கி மகிழ்வர். தர்ம சிந்தனைகள் மேலோங்கும். திட்டமிட்ட சில வேலைகளில் இடையூறுகளும் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். சில சோதனைகளும் தோன்றும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலை விஷயமாக தேவையற்ற அலைச்சல்கள் உருவாகும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்கள் ஏற்படும். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக பழகவும். புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம். 

  விவசாயிகளுக்கு மகசூல் குறையும். புதிய பயிர்களை பயிரிட முனைய வேண்டாம்.

  அரசியல்வாதிகள் எதிர்கட்சியினரிடம் உஷாராக இருக்கவும். மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிக்குப்பிறகே புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

  பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சாதகமான நிலையே தென்படும். குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷம் அடைவீர்கள். மாணவமணிகள் விளையாட்டுகளில் வெற்றி பெற விடாமுயற்சி செய்ய வேண்டியிருக்கும்.

  பரிகாரம்: புதனன்று பார்த்தசாரதிப் பெருமாளை தரிசிக்கவும்.

  அனுகூலமான தினங்கள்: 20, 21. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  வருமானத்திற்கு எந்தக் குறைவும் இருக்காது. உடல்நலம் சீரடையும். வீடு மாற்றம் செய்ய நினைப்போர் அதைச் செய்யலாம். எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உறவினர்களின் அலட்சியப்போக்கு மனதிற்கு வேதனையை கொடுக்கும்.

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிப்பதால் அதற்கு ஏற்றவாறு உழைக்க நேரிடும். வியாபாரிகள் அவசியமான பொருள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வியாபாரம் செய்யவும். விவசாயிகள் புதிய சிறு தானியங்களைப் பயிரிட்டு நல்ல மகசூலைக் காண்பார்கள். வழக்கமான விளைச்சல் குறைய வாய்ப்பு உள்ளதால் கவனம் செலுத்தவும். 

  அரசியல்வாதிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கட்சி மேலிடத்தின் ஆதரவு குறைந்திருக்கும். கலைத்துறையினர் வெற்றிக்கு மேல் வெற்றியைக் காண்பார்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். 

  பெண்களுக்கு பணவரவு சீராக இருக்கும். அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். விட்டுக்கொடுத்து காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும். மாணவமணிகள் பாடங்களை மீண்டும்  மீண்டும் படித்து மனதில் நிறுத்தவும்.

  பரிகாரம்: செவ்வாய், சஷ்டி, கிருத்திகைகளில் செந்திலாண்டவரை வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 19, 22.

  சந்திராஷ்டமம்: 18.

  {pagination-pagination}
  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் வலுப்படும். சிலருக்கு சொத்துகளை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்களின் அலட்சியப்போக்கு மனதிற்கு வேதனையை கொடுக்கும். வருமானத்திற்கு எந்தக் குறைவும் இருக்காது. 

  மேலும் படிக்க: 2019 குருப்பெயர்ச்சியால் 100 சதவீதம் நன்மையடையும் 3 ராசிகள்!

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் முடிவுக்கு வரும். வியாபாரிகளுக்கு அலைச்சலும் டென்ஷனும் படிப்படியாகக் குறையும். வருமானம் அதிகரிக்கும். கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுப் படுத்த முயற்சி செய்யவும். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப்பயிர்களை இடையிடையே பயிரிட்டு லாபத்தை அதிகரிக்கவும். 

  அரசியல்வாதிகளின் புகழுக்கும் கௌரவத்திற்கும் சிறிது பங்கம் ஏற்படும். உங்கள் கட்சிக்காரர்களே எதிரியாக மாறுவார்கள். கலைத்துறையினருக்கு போட்டியும் பொறாமையும் குறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க சக கலைஞர்களே உதவுவார்கள். 

  பெண்மணிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். விட்டுக்கொடுத்து காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும். மாணவமணிகளுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

  பரிகாரம்:  மதுரை மீனாட்சி அம்மனை சென்று தரிசித்து வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 22, 23. 

  சந்திராஷ்டமம்: 19, 20, 21.

  {pagination-pagination}
  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். வருமானம் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். ஸ்பெகுலேஷன் துறைகளில் நல்ல லாபம் உண்டு. பயணங்களால் பல கவுரவங்கள் கிடைக்கும்.

  மேலும் ஒரு புதிய தகவல்: எப்போதும் செல்வ செழிப்புடன் இருப்பார்களாம் இந்த ராசிக்காரர்கள்!

  உத்தியோகஸ்தர்கள் குறித்த நேரத்தில் வேலையை செய்து முடிப்பார்கள். வேலைகளில் மிகுந்த சிரமங்கள் ஏற்படும். சிலருக்கு விரும்பிய உத்தியோக மாற்றம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே இருக்கும். 

  விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் பெருகும். புதிய நிலங்கள் வாங்க இது உகந்த நேரம்.

  அரசியல்வாதிகளைத் தேடி புதிய பொறுப்புகள் வரும். மேலிடத்தின் பார்வை உங்கள் மேல் விழுவதால் எதையும் ஓர் உத்வேகத்துடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் புதிய பாணியில் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். 

  பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் அனுசரித்துச் செல்வார்கள். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

  பரிகாரம்: ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 21, 24. 

  சந்திராஷ்டமம்: 22, 23. 

  {pagination-pagination}

  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  வெற்றிகள் குவியும். முயற்சிகள் பலன் அளிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். மகிழ்ச்சி தாண்டவாடும். திறமைகள் பளிச்சிடும். பொருளாதார நிலை மேம்படும். அவ்வப்போது சிறு பணவிரயங்களும் ஏற்படும். தேக ஆரோக்கியம் பலப்படும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றகரமான காலமிது. உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். புதிய வர்த்தகம் செய்யும் எண்ணம் மேலோங்கும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். புதிய விளைநிலங்களை வாங்கி வருங்காலத்திற்கு அஸ்திவாரம் போடுவீர்கள். 

  அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வார்கள். சச்சரவை ஏற்படுத்தும் விஷயங்களில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் மனநிம்மதி அடைவார்கள். 

  பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமையை காண அரும்பாடு பட வேண்டி வரும். குழந்தைகளுக்கான கடமைகளைச் செய்வதில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் திட்டமிட்ட வேலைகளை பெற்றோர் மற்றும் ஆசிரியரின் ஒத்துழைப்புடன் ஈடுபடவும். 

  பரிகாரம்:  மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபமேற்றி வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 22, 23. 

  சந்திராஷ்டமம்: 24. 

  {pagination-pagination}

  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  வாகனப் பயணத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. உறவினர்களிடம்  பற்றும் பாசமும் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். வருமானம் இருக்கும். குடும்பத்தில் சற்று அமைதி நிலவும். நினைத்த காரியங்கள் சற்று மந்தமாகவே நகரும்.

  இது உங்களுக்காக: கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு பெரிய விடிவுகாலம் இந்த ராசிக்காரர்களுக்கு!

  உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமிருந்தாலும் கொடுத்த வேலையை சற்று இழுப்பறியுடன் முடித்து விடுவீர்கள். வியாபாரிகள் கடும்போட்டிகளைச் சந்திக்க நேரிடும். புதிய முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம்.

  விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் நன்றாகவே இருக்கும். புதிய குத்தகைகளை தற்சமயம் எடுக்க வேண்டாம். 

  அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தில் சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால் எந்த விஷயத்திலும் சற்று பொறுமையுடன் நிதானமாகச் செயல்படவும். கலைத்துறையினருக்கு சிறு சிறு ஒப்பந்தங்கள் தேடி வரும். ரசிகர்களின் ஆதரவும் உந்து சக்தியாக இருக்கும். 

  பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடும் அன்போடும் பழகுவார்கள். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்படும். 

  மாணவமணிகள் படிப்பில் சற்று கவனம் மேற்கொள்ளவும். விடியற்காலையில் எழுந்து படிப்பது மேன்மை தரும். 

  பரிகாரம்:  சனியன்று சனீஸ்வரரை தீபமேற்றி வழிபடுவது நல்லது. 

  அனுகூலமான தினங்கள்: 19, 24. 

  சந்திராஷ்டமம்: இல்லை. 

  {pagination-pagination}

  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். பொருளாதாரத்தில் சற்று முன்னேற்றம் தென்படும். திட்டமிட்ட வேலைகளில் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாக அமையும். குடும்பத்தினரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும்.

  உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளைச் சீராகச் செய்து முடிப்பார்கள். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சரளமான நிலைமை தென்படும்.

  லாபத்தை எதிர்பார்த்து வீண் கடன் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டாம். விவசாயிகளுக்கு லாபமும் நஷ்டமும் மாறி மாறி வரும். கால்நடை வைத்து பால் வியாபாரம் செய்பவர்கள் நல்ல பலனை அடைவார்கள்.

  அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் உதவியால் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவார்கள். தொண்டர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். கலைத்துறையினர் வருமானம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள்.

  பெண்மணிகள் உற்றார், உறவினர்களைச் சந்தித்து உற்சாகம் பெறுவார்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் சற்று கவனக்குறைவு ஏற்படும்.

  பரிகாரம்: புதனன்று ஸ்ரீ ராமரை தரிசித்து வழிபட்டு வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 23, 24. 

  சந்திராஷ்டமம்: இல்லை. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai