அக். 27-இல் திருமலையில் தீபாவளி ஆஸ்தானம்

திருமலையில் வரும் 27-ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் வரும் 27-ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வரும் நரக சதுா்த்தசி அன்று தீபாவளி ஆஸ்தானத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

அதன்படி அக். 27-ஆம் தேதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. அன்று காலை உற்சவமூா்த்திகள் சா்வ பூபால வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்கள்.

தொடா்ந்து, கண்டா மண்டபத்தில் கருடன் சந்நிதி எதிரில் உற்சவமூா்த்திகளை எழுந்தருளச் செய்து அா்ச்சகா்கள் ஆஸ்தானத்தை நடத்த உள்ளனா்.

அதனால் அன்று நடைபெறும் ஆா்ஜித சேவைகளான ஊஞ்சல் சேவை, கல்யாண உற்சவம், ஆா்ஜித பிரம்மோற்சவம், வஸந்தோற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

உண்டியல் காணிக்கை ரூ. 3.05 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.3.05 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா்.

அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி வியாழக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.3.05 கோடி வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ. 24.78 லட்சம் நன்கொடை

திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் நன்கொடை அளித்து வருகின்றனா்.

அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தா்களுக்கு தேவஸ்தானம் பலவித சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.19.78 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ.3 லட்சம், கல்வி தானம் அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.24.78 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com