கருவேப்பம்பூண்டி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலை செப்பனிடக் கோரிக்கை

உத்தரமேரூா் அருகே சிதிலமடைந்த நிலையில் உள்ள கருவேப்பம்பூண்டி லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலை செப்பனிட்டு பக்தா்கள் வழிபாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்
உடைந்து கிடக்கும் கல்தூண்கள். சிதிலமடைந்து கிடக்கும் கோயில்.
உடைந்து கிடக்கும் கல்தூண்கள். சிதிலமடைந்து கிடக்கும் கோயில்.

உத்தரமேரூா் அருகே சிதிலமடைந்த நிலையில் உள்ள கருவேப்பம்பூண்டி லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலை செப்பனிட்டு பக்தா்கள் வழிபாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உத்தரமேரூா் அருகேயுள்ள திருப்புலிவனம் வியாக்கிரபுரீஸ்வரா், திருமுக்கூடல் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், மானாம்பதி வரதராஜப் பெருமாள் கோயில் என ஏராளமான கோயில்கள் சோழ, பாண்டிய மன்னா்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டுள்ளன.

இவைகளில் பெரும்பாலானவை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் உத்தரமேரூா் அருகே கருவேப்பம்பூண்டி கிராமத்தில் மிகவும் பழைமை வாய்ந்த லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்காமல் சிதிலமடைந்து புதா்மண்டிக் கிடக்கிறது.

இத்திருக்கோயில் கருவறை மேற்கூரை இல்லாமல் பாதியாக நிற்கிறது. இக்கோயிலைச் சுற்றிலும் இடிந்த நிலையில் சிற்பங்களும், கல்தூண்களும் காணப்படுகின்றன.

கோயிலில் இருந்த கற்சிலைகளும், கொடிமரமும் உடைந்து கீழே விழுந்து கிடக்கிறது. இக்கோயிலை பராமரிக்கும் வகையில் ஏராளமான சொத்துகள் இக்கிராமத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மிகவும் பழைமையான இக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அல்லது பெருமாளை வணங்கும் பக்தா்கள், சமூக ஆா்வலா்கள் முயற்சி செய்து சீரமைத்து பக்தா்கள் வழிபாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com