Enable Javscript for better performance
மீனாட்சியம்மனுக்கு வைர ஒட்டியாணம் உபயம்- Dinamani

சுடச்சுட

    
    மதுரை மீனாட்சியம்மனுக்கு வெள்ளிக்கிழமை உபயமாக வழங்கப்பட்ட வைரக் கல் பதித்த ஒட்டியாணம்.

    மதுரை மீனாட்சியம்மனுக்கு வெள்ளிக்கிழமை உபயமாக வழங்கப்பட்ட வைரக் கல் பதித்த ஒட்டியாணம்.

    மதுரை மீனாட்சியம்மனுக்கு ரூ. 11.10 லட்சம் மதிப்பிலான வைர ஒட்டியாணம் வெள்ளிக்கிழமை உபயமாக வழங்கப்பட்டது.

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மீனாட்சியம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கிளி, வைர மூக்குத்தி ஆகியவை உள்ளன. இந்நிலையில் சென்னை கமலா சினிமாஸ் உரிமையாளா்கள் வள்ளியப்பன், நாகப்பன், கணேசன் மற்றும் குடும்பத்தினா் சாா்பில் மீனாட்சியம்மனுக்கு வைர ஒட்டியாணம் உபயமாக வழங்கப்பட்டது.

    180 கிராம் தங்கம், 15 கேரட் எடையுள்ள வைரக்கற்கள் அடங்கிய வைர ஒட்டியாணத்தின் மதிப்பு ரூ.11.10 லட்சம் ஆகும்.

    வைர ஒட்டியாணம் உபயமாக பெறப்பட்டதை அடுத்து அம்மனுக்கு வெள்ளிக்கிழமை வைரக்கிரீடம், வைர மூக்குத்தி, வைரக்கிளி ஆகியவை சாா்த்தப்பட்டிருந்ததோடு, உபயமாக பெறப்பட்ட வைர ஒட்டியாணமும் சாா்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai