குருப்பெயர்ச்சியாகும் போது குரு பகவான் தரக்கூடிய யோகங்கள் என்னென்ன?

2019-ம் ஆண்டுக்கான குருப் பெயர்ச்சி நிகழும் மங்களகரமான விகாரி வருடம், ஐப்பசி மாதம் 12-ம் தேதி,
குரு பகவான்
குரு பகவான்

2019-ம் ஆண்டுக்கான குருப் பெயர்ச்சி நிகழும் மங்களகரமான விகாரி வருடம், ஐப்பசி மாதம் 12-ம் தேதி,  சரியாக ஆங்கில மாதத்தில் அக்டோபர் 29-ம் தேதியும் பெயர்ச்சி அடைகின்றார்.

குருபகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவதை தான் குருப்பெயர்ச்சி என்கிறோம். பெயர்ச்சியாகும் போது குரு பகவான் தரும் யோகங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

கஜகேசரி யோகம்

சந்திர பகவானுக்கு குருபகவான் கேந்திர ஸ்தானங்களான 4,7,10 ஆம் இடங்களில் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகும்.

இதனால் பணவருவாய், பகைவர்களை வெல்லும் திறமை, புகழ் மற்றும் தீர்க்காயுளும் உண்டாகும். நூறு யானைகளுக்கு மத்தியில் ஒரு சிங்கம் வந்தால் அத்தனை யானைகளும் சிதறி ஓடுவதுபோல் தோஷங்கள் பறந்து விடும் என்பது பொருள்.

குருசந்திர யோகம்

சந்திர பகவான் குருபகவானுடன் சேர்க்கை பெற்றோ குருபகவானுக்கு 5 ஆம் அல்லது 9 ஆம் இடத்தில் இருந்தாலும் குருசந்திர யோகம் உண்டாகும்.

இதனால் ஜாதகர் உயர்ந்த பதவி, தலைமைப் பதவி, எதிரிகள் இல்லாமல் வாழ்வது, செல்வம் செல்வாக்கு முதலியவற்றைப் பெறுவர். மற்றபடி இந்த யோகத்தில் பலர் தாங்கள் சார்ந்த துறைக்குச் சம்பந்தமே இல்லாத துறையில் நுழைந்து பிரபலமடைவார்கள் என்பது அனுபவ உண்மை.

ருமங்கள யோகம்

மங்களன் என்று அழைக்கப்படும் செவ்வாய் பகவான் குருபகவானுக்கு கேந்திர ராசிகளான 1,4,7,10 ஆகிய இடங்களில் அமர்ந்தால் இந்த யோகம் உண்டாகும். இதனால் நீண்ட ஆயுள், நிலையான செல்வம், புகழ், அசையா சொத்துக்கள் சேர்க்கை ஆகியவைகள் உண்டாகும்.

சிவராஜயோகம்

குருபகவானின் ஆத்ம நண்பரான சூரிய பகவான் குருபகவானுடன் சேர்ந்தோ, சூரிய பகவான் குரு பகவானின் நேர் பார்வையில் இருந்தாலோ, சிவராஜ யோகம் உண்டாகும்.

இந்த யோகத்தால் தந்தை நலம் சீராகும். அரசாங்கப்பதவி, வங்கியில் பெரிய அதிகாரி பதவி, தர்ம ஸ்தாபனங்களுக்குத் தலைமை, ஆன்மிக சக்தி போன்றவை உண்டாகும்.

ஹம்ஸ யோகம்

இது பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றாகும். இது குருபகவான் ஆட்சி, உச்சம் பெற்று லக்னத்திற்கோ, சந்திர பகவானுக்கோ கேந்திரங்களில் இருப்பதால் உண்டாகும். இந்த யோகத்தால் மன வளம் பெருகும். சகலகலா வல்லவராய் யாரையும் தன் வசப்படுத்தும் ஆற்றலையும் பெறுவார். பெரும் பணவசதி ஏற்படும். தீர்க்க தரிசிகளாகவும், ஞானிகளாகவும் இருப்பார்கள்.

குருப் பெயர்ச்சியின் மூலம் நன்மை பெறும் ராசிகள்:

மேஷம்,  மிதுனம்,  சிம்மம்

குருப் பெயர்ச்சியின் மூலம் நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்:

கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம்

குருப் பெயர்ச்சியின் மூலம் பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்:

 ரிஷபம், கடகம், துலாம், மகரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com