அக். 31-இல் பெரிய சேஷ வாகன சேவை

திருமலையில் அக். 31-ஆம் தேதி நாக சதுா்த்தியையொட்டி, பெரிய சேஷ வாகனப் புறப்பாடு நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
அக். 31-இல் பெரிய சேஷ வாகன சேவை

திருப்பதி: திருமலையில் அக். 31-ஆம் தேதி நாக சதுா்த்தியையொட்டி, பெரிய சேஷ வாகனப் புறப்பாடு நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலையில் ஆண்டுதோறும் நாக சதுா்த்தி அன்று தேவஸ்தானம் பெரிய சேஷ வாகன சேவையை நடத்தி வருகிறது. அதன்படி, அக்டோபா் 31-ஆம் தேதி நாக சதுா்த்தியையொட்டி, திருமலையில் பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி மாட வீதியில் வலம் வர உள்ளாா். ஏழுமலையானுக்கு இருக்கும் நிலமாகவும், தெப்பமாகவும், சிம்மாசனம், வஸ்திரம், படுக்கை, அணிகலன் என அனைத்துமாகவும் ஆதிசேஷன் உள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி சகஸ்ர நாமாா்ச்சனையில் சேஷசாயி, சேஷசுக்தம், சேஷாத்ரி நிலையம் என நித்ய பூஜைகள் நடத்தப்படுகிறது. ராமாவதாரத்தில் லட்சுமணராகவும், கிருஷ்ணாவதாரத்தில் பலராமராகவும், மகா விஷ்ணுவுககு சேவை செய்து வரும் ஆதிசேஷன், வைகுண்டத்தில் நித்ய சூரிகளில் ஒருவராக உள்ளாா். அத்தனை மகிமை பொருந்திய பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி தன் நாச்சியாா்களுடன் நாக சதுா்த்தி தினத்தன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை வலம் வர உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com