
கோச்சார குருவின் பெயர்ச்சி 25% அனுகூல பலன்கள் பகுதி (1) - 22.10.2019 தொடர்ச்சியை இன்று பார்ப்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு குருவானவர் 6ல் அமர்ந்து 2, 10, 12 வீட்டை பார்ப்பார். ஆறு என்பது குருவிற்கு பலம் இழக்கும் வீடு இருந்தாலும் தொண்டு நோக்கு மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு ஊதிய கிடைக்கும். கடக ராசி ஜாதகருக்கு கடனை வாங்க வைக்கும் முக்கியமாக தொழிலுக்காகவோ, குடும்ப சந்தோஷத்திற்காகவோ, வெளிநாடு செல்வதற்கோ கடன் வாங்குவார். சுப செலவு, பண புழக்கம் இருக்கும் தசை நார், கெட்ட கொழுப்பால் உடலில் சிறு பாதிப்பு ஏற்படும், குடும்ப ஒற்றுமை ஏற்படும். நீண்ட கால கோர்ட் பிரச்னை முடிவுக்கு வரும். கடனாக கொடுத்த பணம் திரும்பி வரும். நேர்த்திக்கடன் செலுத்தும் நேரம் இது, மறைமுக எதிரிகள் உங்களுடன் இருப்பார்கள்.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். திருமண யோகம் உண்டு. குழந்தைக்காக மருத்துவம் செய்து கொள்ள நல்ல நேரம், உங்களுக்கு கிடைக்கவேண்டிய பொருளாதாரம் கிட்டும். பேச்சில் நிதானம் இல்லாத நீங்கள் தெளிவாக பேசுவீர். உங்கள் குழந்தைகள் மென்மேலும் உயர்வர். எதிரிகள் உங்களை சுற்றி இருப்பார்கள் முக்கியமாக நண்பர்கள் அல்லது வேலை செய்யும் இடங்களில், சிலர் பேரன் பேத்தி எதிர்பார்த்து காத்திருபபோர்களுக்கு அது கிட்டும், கணவன் மனைவி பிரச்னை ஏற்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு பிளவு ஏற்படும், பாசம் பரிவு கொண்ட சீரான பலன், தந்தையால் உங்களுக்கு பலன் உண்டு. உழைப்பில் கஷ்டம் இருக்கும்.
கடக ராசிக்காரர்கள் வீண் பேச்சு பேசுவது தவிர்க்கவும். தனத்தை வைத்திருப்பவர்கள் வீட்டில் சுப செலவாக மாற்றவும். எதிரிகளை வெற்றிகொள்ள நினைத்து உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்வீர் என்பது சூட்சமம். இந்த கால கட்டத்தில் பௌர்ணமியில், நீர்நிலையை உள்ள கோவிலுக்குச் சென்று, முக்கியமாக சிவபெருமான் அம்பிகையை நமஸ்கரிக்கவும். இந்த வருடத்துக்குள் ஆலங்குடி குருபகவானை தரிசிக்கவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவானவர் 5ம் வீட்டில் அமர்ந்து குருவின் பார்வை சந்திரன் மேல் பலமாகவும் மற்ற 9, 11ம் பாவத்தையும் அமோகமாக பார்க்கிறார். இங்கு குருவானவர் திரிகோண வீட்டை பலப்படுத்திக்கிறார். இவர்கள் வாழ்க்கை இந்த வருடம் நன்கு யோகம் தான். இந்த ராசிக்காரர்கள் பூர்விகம் மற்றும் தந்தைவழிசொத்து கிட்டும். தெய்வ கடாட்சம் உங்களை காக்கும். நல்ல கூட்டு தொடர்பு உண்டு. புகழ் கிட்டும். தைரியம் அதிகமாக இருக்கும்.
புது காரியம் சாதிக்க நினைப்பவர்கள் தொட்டது பொன்னாகும். எதிலும் வெற்றி வாகை சூடுவீர், உயர் படிப்பு படிக்கும் மாணாக்கர்கள் அதிக மதிப்பெண் எடுப்பார்கள். வெளிநாடு பயணம் உண்டு. அதிர்ஷ்டம் கிட்டும், தெய்வ தேடல் இருக்கும். குருவின் அனுக்கிரகம் திருப்தி அடையும், அதிர்ஷ்டம் கிட்டும், பட்டம் பதவி கிட்டும், தன்னம்பிக்கை உங்களுக்கு வரும், குழந்தைகளால் வீட்டில் கலகலப்பு உண்டாகும், வேலையில் மாற்றம் சிலருக்கு உண்டு.
இந்தக்காலம் பொன்னானது, இருந்தாலும் குருவும் சனி கேது சேர்க்கை இருப்பதால் சிறிது காலத்தில் தடையை ஏற்படுத்தி வெற்றிவாகை சூடுவீர்கள். தற்பொழுது "No pain no gain" என்ற கோட்பாட்டில் இருந்தால் உங்கள் செயல் வெற்றி தான் என்பது சூட்சம விதி. சீரடி சாய் பாபா, மகா பெரியவா, ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கவும் மற்றும் சிவபெருமானின் மேல் சூரியன் படும் ஸ்தலங்களுக்குச் செல்லவும் .
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குருவானவர் 4ம் வீட்டில் அமர்ந்து குருவின் பார்வை 8, 10, 12ம் பாவத்தை பார்க்கிறார். குருவானவர் இரு கேந்திரத்தை பலபடுத்துகிறார். கன்னிக்கு குரு 4, 7-ம் உடையவர் மற்றும் பாதகாதிபதி என்பதால் சில இடங்களில் குறைத்து தருவார்.
இந்த ராசியின் குருவால் ஏற்படும் பொதுவான பலன் என்றால் மனைவி குழந்தைகளுக்கு தேவையை பூர்த்தி செய்தல், ஓய்வின்றி இருத்தல், வேலைக்கு தரவேண்டிய பாக்கிகள் மற்றும் போனஸ் கிடைக்கும். இன்சூரன்ஸ் பணம் கிட்டும், குழந்தை செல்வம் தாமதம். படிப்பில் ஆர்வம் உயர்கல்வியில் வெற்றி, தாய் வழியால் ஆதரவு, அலைச்சலில் ஏற்படும் சோர்வு, கூட்டு தொழிலை மற்றும் வேலையில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் குறையும்.
புதிய வாகனம் மற்றும் வீட்டுக்கு தேவையானவை வாங்குதல், சுகத்தை மேம்படுத்தும். வீடு மாற்றம், தொழிலில் முதலீடு செய்தல், அறிவின் ஆற்றல் பெருகும், அறிவியல் ஆராய்ச்சியில் இருப்பவர்கள் புதுவித கண்டுபிடிப்பு ஏற்படும். விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள் அதிக வருமானம் பெறுவார், தான் கற்ற வித்தையை வெளிக்கொணர்வார், தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு விசா கிட்டும், கோர்ட் கேஸ் தீர்வு, நிம்மதியான தூக்கம், உடல் ஆரோக்கியம் குறைவு, திடீர் வருமானம். அஷ்டமத்தில் பார்ப்பதால் உடல் சீர் இல்லாதவர்கள் குணம் பெறுவார்கள். 10ல் ஒரு பாவி இருந்தால் போதும் என்பதற்கு இணங்க, பத்தில் ராகு அவரை குரு பார்வையிட உங்கள் வேலையை ஊக்குவிப்பார்.
கன்னி ராசி அன்பர்கள் தொழிலையையும் தக்கவைத்து கொள்ளும் நேரம். கன்னிக்கு செலவு என்பது நிச்சம் அதை குடும்ப சந்தோஷத்தை பூர்த்தி செய்யவும் உங்கள் வருமானத்தை சுப விரயமாகவும் மாற்றவும். இந்த கால கட்டத்தில் விநாயகரை மற்றும் தட்சிணாமூர்தியை வணங்கவும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களின் குருவானவர் 3ம் வீட்டில் அமர்ந்து 7, 9, 11 அருமையான இடத்தை பார்க்கப்போகிறார். சுப கத்திரி யோகம் பெறுவீர். இந்த ராசிக்காரர்கள் கணவன் மனைவி உறவு திக் பலம் பெரும். எல்லாவற்றிலும் திருப்தி இருக்கும், சகோதர சகோதரிகளுக்கு தேவையானதை செய்வார்கள், திருமண தடங்கல் சரியாகி வீட்டில் மங்கள சத்தம் கேட்கும், நகை சேரும், கடவுள் அனுக்கிரகம் இருப்பதால் நீங்கள் கேட்டது கிட்டும்.
உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். கூட்டு தொழிலை ஏற்படுத்தும், துணிச்சலான காரியம் செய்வீர், காதல் கைகூடும், தந்தை வழியில் லாபம், தனம் குறைவு, நிறைய பெரியமனித ஆதரவு உண்டு, ஆன்மீக பயணம் ஏற்படும், பூர்விக இடம் மற்றம் உண்டு, வம்ச விருத்தி உண்டு, உடல் பாதிப்பு ஏற்படும், குருபெயர்ச்சி கடைசியில் பகுதியில் பழைய வீட்டை விற்று புது வீடு வாங்கும் யோகம் ஏற்படும்.
துலாம் என்பது நேர்மையின் உதாரணம் கொண்டவர்கள். சில நேரங்களில் உங்களின் உண்மை பேச்சு எதிரிகளை சம்பாதிக்கும் காலம். இவர் மூன்றுக்கும் ஆறுக்கும் உடையவர் மூன்றில் இருந்து சனியோடு தொடர்பில் இருப்பதால் மறைமுக எதிரிகள் உருவார்கள். ஓம் நமச்சிவாய மந்திரம் தினமும் சொல்லவும் உங்களின் மனோதைரியம் வெளிப்படும். இவர்கள் வழிபடும் தெய்வம் முருகரையும் மற்றும் மகா லக்ஷ்மியை வழிபடவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களின் குருவின் சிறப்பான இடமான 2க்கு வருவதும் நல்லது. அங்கிருந்து 6, 8, 10 இடத்தை பார்க்கப்போகிறார். இரண்டுக்கும் ஐந்துக்கும் உடைய குரு உங்கள் பூர்வ புன்னியத்திற்கு ஏற்ப பலன் கிட்டும். விருச்சிகத்திற்கு ஏழரை சனி என்பதால் சனி இருக்கும்பொழுதும் கொஞ்சம் பிரச்னை இருந்தாலும் குருவால் நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்கள் பணம் சிறிதுகாலம் குறைத்து தருவார். மந்தமாக படித்தவர்கள் நன்று படிப்பார்கள், இழுபறியான செயல்கள் நல்ல முடிவுக்கு வரும், நீண்ட நாள் இருந்த உடல் பாதிப்பு மருத்துவ முறையில் சீர்படும், சொத்துக்கள் இழுபறியாக இருந்த அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும், உங்களுக்குள் இருக்கும் திறமை வெளியில் கொண்டுவரப்படும்.
ஏதாவது ஒருவகையில் அதிர்ஷட காத்து வீசும், மாணாக்கர்களுக்கு குருவால் நன்மை உண்டாகும். எதிரிகள் தாக்கம் சிறிது குறைக்கப்படும், அரசியலில் புதிய பதவி கிட்டும். கடின உழைப்பால் உடல் பாதிப்பு ஏற்படும். கடன் அடையப்படும். உயர்மனிதர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். இளைய சகோதர பிரச்சனை ஏற்படும். மன அழுத்தம் குறைக்கப்படும். வேலை புதியதாக கிட்டும், சம்பள உயர்வு உண்டு. உண்மையாக இருப்பீர்கள், பண பிரச்னை இருக்காது, இருந்தாலும் ஒருவித குழப்ப மனநிலை இருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்கள் உழைத்து தன்னுடைய சொந்த முயற்ச்சியில் வெற்றி பெருகிறானோ அதுதான் முழுமையான வெற்றி என்று உணர்ந்து அதற்கேற்ப உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு ஒரு சுப வெற்றி படிக்கட்டுகள் தென்படும். நீங்கள் திட்டை குரு பகவானையும் மற்றும் வீர ஆஞ்சநேயரையும் வணங்கினால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய அனைத்தும் கிட்ட வழிவகுப்பார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களின் குரு அவர் வீட்டில் மூலதிரிகோணம் அடைந்து அவருக்கு பிடித்த 5, 7, 9 வீட்டை பார்த்து பலப்படுத்துகிறார். ஜென்ம சனி உடன் கேது உங்கள் ராசியில் வளம் வந்தாலும் குருவானவர் உங்கள் எதிர்காலத்தை நல்வழியில் சீர்படுத்துவார். இந்த ராசிக்காரர்களுக்கு உங்கள் பிள்ளைகளால் சந்தோஷம், பூர்வ புண்ணியம் மேம்படும், நினைத்த கனவு நிறைவேறும், கணவன் மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்துகொள்வீர், குழந்தைக்கு பாக்கியத்திற்கு மருத்துவரை சந்திப்பது நல்லது.
ஆரோக்கிய பலம் உண்டு. ஆனால் இதயம் மற்றும் இடுப்புக்கு கீழ் உடலில் பாதிப்பு ஏற்படும். வெளிநாட்டு கனவு நினைவாகும். கூட்டு தொழில் கைகூடும் ஆனால் கவனமாக இருக்க வேண்டும், தன்னம்பிக்கை குறைவு இருக்கும், அரசியல் பிரச்னை ஏற்படும், வேலையில் கவனம் தேவை, தர்மத்தை தாங்குவதாக நினைத்து பிரச்னையில் மாட்டிக்கொள்வீர், பதட்டத்தை தவிர்க்கவும். புது வண்டி வாகனம் வாங்குவீர், எதிலும் விழிப்புடன் இருப்பது நல்லது.
தனுசு ராசிக்காரர்கள் "பதறாத காரியம் சிதறாது" என்பதற்கு ஏற்ப யோசித்து சிந்தித்து செயல்பட வேண்டும். உடல் சீராக இருக்க உடற்பயிற்சி மற்றும் யோகா அவசியம். நீங்கள் உங்கள் குலதெய்வத்தை தினமும் வணங்கி செல்லவும். பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் காலில் விழுந்து நமஸ்கரிக்கவும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களின் குருவானவர் 12ம் வீட்டில் அமர்ந்து 4, 6, 8 வீட்டை பார்க்கப்போகிறார். ஏழரை சனி உங்களை ஆட்டிப்படைக்கும் நேரத்தில் குருவின் ஆதரவு உங்களுக்கு கொஞ்சம் சுகமே. விரைய சனி உங்கள் உடலில் பாதிப்பு மற்றும் வீண் விரயம் ஏற்பட்ட உங்களுக்கு கொஞ்சம் சுப விரயம் ஏற்படும். உடல் பாதிப்பு உண்டு, ஆனால் ஆயுள் நன்றாக இருக்கும். வேலை பளு அதிகமாகும், பிடிவாதமிக்க செயல்கள் ஏற்படுத்தும். தொழில் சரிவு ஏற்படும், புதியதாக எந்த தொழிலையும் முதலீடு கொண்டு ஆரம்பிக்க கூடாது. சம்பள பிரச்சனை இருக்கும், எதிர்கால திட்டம் தீட்டுவீர்கள், யாரும் உங்களுக்கு உதவ மாட்டர்கள்.
வீடு கட்ட முயற்சித்தால் வெற்றி, நீங்கள் பேசும் பேச்சு பல்வேறு வில்லங்கத்தை ஏற்படுத்தும், குடும்ப ஒற்றுமை சீராக இருக்காது, குடும்பத்தில் கணவன் மனைவி மன பிரச்னை ஏற்படுத்தும், தர்மத்தை செய்ய சரியான நேரம், கோர்ட் வழக்கில் கவனத்தை திருப்பும், முன்பு இருந்த தடைகள் நீங்கும், போராட்டம் இருக்கும், உங்கள் உயர்வை வெளியில் சொல்லவேண்டாம்.
உங்கள் உயர்வரவு உங்கள் கையில் உள்ளது. மனம் தளரமால் தர்ம வழியில் செல்வது நல்லது. நவக்கிரத்தில் குருவுக்கும் சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றவும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது திருமீயச்சூர் லலிதாம்பிகை திருக்கோயில் செல்லவும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களின் குருவானவர் 11ம் வீட்டில் அமர்ந்து 3, 5, 7 இடத்தை பார்க்கப்போகிறார். இரண்டுக்கு உரியவர் 11-ல் மூலத்திரிகோண வீட்டில் இருப்பதால் பெரும்பகுதி நன்மை ஆகும். இந்த ராசிக்காரர்களுக்கு வீட்டில் சந்தோஷ நிகழ்ச்சிகள் உண்டாகும், குருபலம் பெற்று தம்பதியருக்கு குழந்தைபேறு கிட்டும், திருமணம் கை கூடும். இரண்டுக்கு மேற்பட்ட கூட்டு தொழிலில் ஈடுபடுவீர்கள், உங்கள் முயற்சியால் வெற்றி பெறுவீர்கள், பேச்சில் தெளிவு ஏற்படும், அறிவார்ந்த செயல்கள் தைரியமாக செயல்படுவீர்கள், விவேகத்தைவிட வேகம் அதிகபடும், படிப்பில் கவனம் குறைவு ஏற்படும், தலைமை பொறுப்பு கிட்டும், அரசியல் ஆதரவு கிட்டும், தான தர்மத்தால் பூர்வ புண்ணியம் பலம் பெரும். ஆடை நகை சேர்ப்பு உண்டு, ஆராய்ச்சி உயர்கல்வி மேம்படும், உங்கள் கவனம் பொருளாதார சேமிப்பில் இருக்கும், நீங்கள் நினைத்தபடி திருமணம் நடைபெறும்.
தொழில் முன்னேற்றத்திற்காக உழைக்கும் உழைப்பு உடல் பாதிப்பு ஏற்படுத்தும். உடல் வேகத்திற்கு ஏற்ப மனதை அமைதிபடுத்திக்கொள்ளவும். சித்தர்கள் வழிப்பாடு மற்றும் சீரடிக்கு செல்லவும். வியக்கிழமைகளில் குருவின் மந்திரத்தை உச்சரித்து அவரை வணங்கவும்.
மீனம்
மீன ராசிக்கு குருவானவர் ஆட்சி பெறுபவர் கர்ம ஸ்தானத்தில் பத்தில் அவர் வீட்டில் பலம் பெறுகிறார் மற்றும் 2, 4, 6 பலம் பெறுகிறார். மீன அதிபதியான குருவானவர் அவர் மூலதிரிகோணம் அடைவது ஒருவித நன்று இந்த ராசிக்காரர்கள் தடுமாற்றம் இருக்கும். மாணாக்கர்கள் நன்று படிப்பார்கள், கணவன் மனைவி குடும்பத்தால் மகிழ்ச்சி இருக்கும். வெளிநாடு வாய்ப்பு கிட்டும், தன வரவு குறைவு, வேலையில் மனக்கசப்பு பிரச்னை ஏற்படும், எதிரிகளால் பிரச்னை சிறிதுகாலம் இருக்கும், மற்றவர்கள் உங்கள் மீது சந்தேகம் மற்றும் தவறாக நினைத்து இருப்பார்கள், கேட்ட இடத்தில் பணம் கிட்டும், நிதானம் அற்று இருப்பார்கள் உத்தியோகத்தில் களங்கம் ஏற்படும், அரசியலில் இழிவு நிலை எதிரிகள் கொண்டுவருவார்கள். பெற்றோரின் ஆரோக்கியம் சீர்படும். சிறு சிறு ஆரோக்கிய பிரச்னை ஏற்படும். உங்கள் தவறுகளை உணர்ந்து சரி செய்ய வேண்டும்,
இந்த ராசிக்காரர்கள் உணர்ச்சிகள் கட்டுப்படுத்தி செயல்களை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். உங்களுக்கு ஏற்ற கோவில் திருச்செந்தூர் சென்று கடலில் மற்றும் அங்குள்ள கிணற்றில் மூழ்கி, முருகரை தரிசித்து வரவும்.
சூட்சம விதி: குருவின் கோச்சார பெயர்ச்சி வைத்து மட்டும் பலன் சொல்ல முடியாது. எல்லா ராசிகளும் குரு பகவானால் முடிந்தவரை நன்மை மட்டுமே நிகழும். இருந்தாலும், குருவின் சேர்க்கை பார்வை கொண்ட சனி, ராகு, கேது கிரகங்கள் ஒவ்வொரு லக்கினம் மற்றும் ராசிக்காரர்களுக்கு வெவ்வேறு வடிவில் நன்மையும் துன்பத்தையும் கொடுக்கும். குருவால் நன்மை ஏற்பட்டால் அதற்கேற்ப ஜெனன ஜாதகத்தில் தசா புத்திகளும் நன்றாக இருக்கவேண்டும் மற்றும் கிரகங்களும் ஆதரவாக செயல்பட வேண்டும் அப்பொழுதுதான் நூறு சதவீதம் வேலை செய்யும். எல்லா கிரங்கங்களின் கோச்சாரமும் என்பது 25% மட்டும் பலன்கள் தர வல்லது என்பது விதி.
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மைஸ்ரீ குருவே நமஹ
- ஜோதிட சிரோன்மணி தேவி
Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com