
திருமலை ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பிரசாதம், ஏழுமலையான் திருவுருவப் படம் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.
திருமலை ஏழுமலையானை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதன்கிழமை வழிபட்டார்.
திருமலை ஏழுமலையானை வழிபட தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச்செண்டு அளித்து வரவேற்று, தங்கும் வசதி செய்து தந்தனர். இரவு திருமலையில் தங்கிய அவர், புதன்கிழமை வராக சுவாமியை தரிசித்தார். பின்னர், வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார்.
தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் வேத ஆசீர்வாதம் செய்வித்து, ஏழுமலையான் பிரசாதம், திருவுருவப் படம் உள்ளிட்டவற்றை வழங்கினர். பின்னர், கோயிலை விட்டு வெளியில் வந்த அவர் கூறுகையில், நான் ஏழுமலையானின் பக்தை, அவரை தரிசித்தது மகிழ்ச்சி அளிக்கிறது, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் சேவைகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது என்றார்.