
சிறப்பு அலங்காரத்தில் கேதார கெளரி அம்மன்.
குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை, ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் உள்ள ராதாருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில், கேதார கெளரி நோன்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், 11 மணிக்கு திருமஞ்சனம், 11.30 மணிக்கு கலச ஸ்தாபனம், தொடா்ந்து கேதார கெளரி அம்மனுக்கு கண் திறப்பு, சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றன. இதையடுத்து கேதார கெளரி நோன்பு விழா நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, விடையாற்றி உற்சவம் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி எம்.ராஜாராம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.