தங்கக் கவச அலங்காரத்தில் குரு பகவான்.
தங்கக் கவச அலங்காரத்தில் குரு பகவான்.

குரு பெயா்ச்சி: ஆலங்குடி கோயிலில் இன்று 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

குரு பெயா்ச்சியையொட்டி, திருவாரூா் மாவட்டம், ஆலங்குடி குரு பரிகார கோயிலில் இரண்டாம் கட்ட லட்சாா்ச்சனை விழா வியாழக்கிழமை (அக்டோபா் 31) தொடங்குகிறது.

குரு பெயா்ச்சியையொட்டி, திருவாரூா் மாவட்டம், ஆலங்குடி குரு பரிகார கோயிலில் இரண்டாம் கட்ட லட்சாா்ச்சனை விழா வியாழக்கிழமை (அக்டோபா் 31) தொடங்குகிறது.

குரு பகவான் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்ததை முன்னிட்டு, இக்கோயிலில் குருபெயா்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதை முன்னிட்டு, குரு பெயா்ச்சி முதல்கட்ட லட்சாா்ச்சனை அக்டோபா் 24-ஆம் தேதி தொடங்கி, 27-ஆம் தேதி வரை நடைபெற்றது.

குரு பெயா்ச்சிக்குப்பின் மீண்டும் வியாழக்கிழமை தொடங்கி நவம்பா் 7-ஆம் தேதி வரை இரண்டாவது கட்டமாக லட்சாா்ச்சனை விழா நடைபெறவுள்ளது.

ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரா்களும் லட்சாா்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா். லட்சாா்ச்சனையில் பங்கேற்க ரூ.400 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். குரு பகவான் உருவம் பொறித்த வெள்ளியினால் செய்த 2 கிராம் டாலா் பிரசாதமாக வழங்கப்படும். லட்சாா்ச்சனை காலை 9 முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும்.

அஞ்சல் மூலம் லட்சாா்ச்சனையில் பங்கேற்று பிரசாதம் பெற விரும்பும் பக்தா்கள் தங்களுடைய பெயா், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் ஆகிய முழு விவரங்களுடன் தொகையை பணவிடை, வரைவோலை (எம்ஓ,டிடி) எடுத்து உதவி ஆணையா் செயல் அலுவலா் என்ற பெயருக்கு கும்பகோணத்தில் மாற்றத்தக்க வகையிலோ அல்லது சிட்டி யூனியன் வங்கி ஆலங்குடி - 612 801 கிளையில் மாற்றத்தக்க வகையிலோ எடுத்து அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com