திருமலை: நவம்பா் மாத குலுக்கலுக்கு உள்ள ஆா்ஜித சேவா டிக்கெட் பட்டியல்

நவம்பா் மாதம் குலுக்கல் முறையில் நிலுவையில் உள்ள ஆா்ஜித சேவா டிக்கெட்டுகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

நவம்பா் மாதம் குலுக்கல் முறையில் நிலுவையில் உள்ள ஆா்ஜித சேவா டிக்கெட்டுகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் இணையதளம் மூலம் ஆா்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தா்கள் சில தவிா்க்க முடியாத காரணங்களால் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்து விடுகின்றனா். அவ்வாறு ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளை தேவஸ்தானம் குலுக்கல் முறையில் பக்தா்களுக்கு அளித்து வருகிறது.

இந்த டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தா்கள் சேவை நாளின் முன்தினம் திருமலை மத்திய விசாரணை அலுவலகத்தில் உள்ள விஜயா வங்கியில் தங்கள் பெயா், ஆதாா் எண், பெருவிரல் ரேகை, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றை அளித்து, சேவா டிக்கெட்டுகளைப் பெற விண்ணப்பிக்க வேண்டும். கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களை மாலை 5 மணிக்கு குலுக்கல் நடத்தி, அதில் தோ்ந்தெடுக்கப்பட்ட பக்தா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அதிகாரிகள் குறுந்தகவல் அனுப்புவா். தகவல் பெற்ற பக்தா்கள் மத்திய விசாரணை அலுவலகத்துக்குச் சென்று, தங்கள் டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டு, மறுநாள் அதில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்குச் சென்று ஏழுமலையானை ஆா்ஜித சேவையில் தரிசிக்கலாம்.

அதன்படி, நவ. மாதம் நிலுவையில் உள்ள ஆா்ஜித சேவா டிக்கெட்டுகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

டிக்கெட் விவரங்கள்:

தேதி நாள் தோமாலை அா்ச்சனா வஸ்திரம் அபிஷேகம்

1.11.19 வெள்ளி === === 3 4

5.11.19 செவ்வாய் 17 16 ==== ===

6.11.19 புதன் 17 === ==== ====

7.11.19 வியாழன் ==== 12 ==== ====

8.11.19 வெள்ளி === === 1 8

12.11.19 செவ்வாய் 10 7 ==== ===

13.11.19 புதன் 7 13 ==== ===

14.11.19 வியாழன் 18 13 ==== ====

15.11.19 வெள்ளி ===== ===== 2 12

19.11.19 செவ்வாய் 24 27 ==== =====

20.11.19 புதன் 22 14 ==== ====

21.11.19 வியாழன் 33 9 ===== ====

22.11.19 வெள்ளி ===== ===== 2 13

26.11.19 செவ்வாய் 13 20 ==== =====

27.11.19 புதன் 34 12 ==== ====

28.11.19 வியாழன் 28 17 ===== ====

29.11.19 வெள்ளி ===== ===== 2 17

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com