சுடச்சுட

  

  தோஷங்களை நீக்கி சந்தோஷத்தைத் தரும் அங்காரக கிரக ப்ரீதி ஹோமம்! 

  By DIN  |   Published on : 09th September 2019 01:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Dhanvantari

   

  வேலூர் மாவாட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், அருளானைப்படி வருகிற 10.09.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை உலக மக்கள் நலன் கருதி அங்காரக ப்ரீதி ஹோமம் எனும் செவ்வாய் கிரக சாந்தி ஹோமமும் காலசக்ர பூஜையும் நடைபெற உள்ளது.

  அங்காரக கிரக சாந்தி ஹோமம்

  ஆரோக்கியத்தையும், அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சி போன்ற வசதிகளையும் மேம்படுத்தி புதிய வாய்ப்புகள் பெற்று உடன்பிறந்தோருடன் நல்லுறவு வளர்த்துக் கொண்டு தெளிவாக முடிவெடுக்க இயலும் இந்த அமைப்பை நமக்கு ஏற்படுத்தி தருவது அங்காரகன் என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகமாகும். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் உச்சத்திலிருந்தால், தைரியம், உடல் வலிமை போன்றவற்றை அளிப்பார். நீச்சமடைந்திருந்தாலும், சாதகமற்ற வீட்டில் இருந்தாலும் கடன்கள், நோய்கள், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை ஏற்படுத்துவார்.

  செவ்வாய் மனித உணர்ச்சிகளைக் குறிக்கும் கிரகம் ஆகும். நமது மனோபலங்களை கட்டுப்படுத்தும் கிரகம் செவ்வாய் ஆகும். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இல்லையெனில், பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. செவ்வாய் ஹோமம், இந்த தோஷங்களை நீக்கி, வாழ்வில் முன்னேறுவதற்கான வாய்ப்பை அளிக்கக் கூடியது.

  அங்காரக ஹோமத்தின் சிறப்பம்சங்கள்

  வலுவாக இருக்கும் செவ்வாய், தனிப்பட்ட ஆற்றலையும், பதட்டமான சூழ்நிலையைச் சிறப்பாகக் கையாளும் தைரியத்தையும் அளிக்கிறார். நிதிநிலையை மேம்படுத்துகிறார். இந்த ஹோமம் செய்வதன் மூலம் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும், உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கும், பண விஷயங்களை அமைதியாக கையாளும் திறன் ஏற்படும். இந்த கிரகத்தை சாந்தப்படுத்தும் அங்காரக கிரக சாந்தி ஹோமத்தில் பங்கு கொண்டு, செவ்வாய் கிரகத்தின் அனுக்கிரகத்தைப் பெற்று, அதனால் விளையும் தெய்வீக ஆற்றல்களை, உங்கள் வாழ்க்கை நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தன.

  தொடர்புக்கு

  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
  அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
  வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

  Web: www.danvantritemple.org, www.danvantripeedam.blogspot.in

  Email: danvantripeedam@gmail.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai