கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!

கர்மா என்றால் என்ன என்பதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு அவை ஊழ்வினை,
கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!

கர்மா கோட்பாடு

கர்மா என்றால் என்ன என்பதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு அவை ஊழ்வினை, வினைப்பயன் என்றெல்லாம் கூறலாம். அதற்கு ஒட்டுமொத்த கூற்றாக திருக்குறள்,  பாகவதம், சிலப்பதிகாரம், அகத்தியர் கன்ம காண்டம் மற்றும் அனைத்து சமயநெறி புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. இன்றும் இந்துக்களின் யசூர் வேதத்தில் (பிரகதாரண்யக  உபநிடதம்) "ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்" என்றும் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்’ என்பது சிலப்பதிகார வரிகள் ஒரு  வரைமுறையை வகுக்கப்பட்டுள்ளது. 

நாம் ஏன் இந்தப்பிறவியில் மனிதனாய் பிறக்கிறோம் அதற்கேற்ப கிரகங்களை கொண்டு நம்மை ஆட்டிப்படைக்கிறது என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு. இவை  அனைத்தும் "எதை விதைத்தோமோ அதை இன்று அறுவடை செய்கிறோம்" அவ்வளவுதான். முற்பிறவிச்செயல்களான நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுதியே  சேமித்த வினைப்பயன் (சஞ்சித கர்மம்- நிலை வைப்புக் கணக்குகள்) இன்று நமக்கு அமைந்த ஜாதகம் அல்லது தலைவிதி என்றும் கூறலாம். இப்பிறவியில் நாம் செய்யும்  ஊழ்வினை ஒருபகுதி பகுதிதான் பிராரப்த கர்மாவாக (செயல்படுகின்ற வினைப்ப்யன்) குறிப்பிட்ட இப்பிறவியில் செயல்படவைக்கிறது. வரஇருக்கின்ற வினைப்பயன் பயனை  ஆகாமிய கர்மாவாக (நடப்புக் கணக்கு) மீதி வைத்த கர்மாவையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக மறுபிறவி என்று கோட்டில் பயணிக்க வைக்கும்.

அறிவியல் வினை விளைவுக் கோட்ப்பாடுபடி ஒன்றின் வினை காரணமாக இன்னொரு நேரடி நிகழ்வு அதாவது விளைவு நிகழும் என்பதைக் குறிக்கின்றது. இதன்  அடிப்படையில் தான் நோய்களையும், அதற்கான காரணிகளையும், அதற்குரிய மருந்துகளையும் ஆராய்ந்து கண்டுபிடிக்கின்றனர். அதற்காக என்ன செய்ய முற்படுகிறோமோ  அது தான் விளைவாகும் (result). 

வேத ஜோதிட படி, மனிதனின் நன்மை தீமை பொறுத்தே அவனுடைய மறுபிறவி உருவெடுக்கிறது. கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி என்று  சொல்வதைவிட அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால்  அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் பிறப்பு ஜாதகத்தில் தெளிவு  பெரும். கர்மகாரகன் சனியானவர் மற்ற கிரங்களுடன் சேர்ந்து சரியான பதிலடி கொடுப்பார். அதன் வெளிப்பாடு கோட்சர சனி காலத்திலும் கர்மகாரகன் தசா புத்திக்காலத்திலும் அந்த மனிதனை புரட்டி போட்டுவிடும். ஒவ்வொருவரின் செயல் வினைக்கு மறுபிறவியில் கீழ் உலகங்களில் உழன்று மீண்டும் பூமியில் இழி  பிறப்பாளர்களாகவும், நல்வினைகள் செய்தவர்கள் சொர்க்கலோகம், மற்றும் மேலுலகங்களுக்குச் சென்று கடவுளிடையே முக்தி அல்லது  பிறப்பிலா பெருநிலை பெறுவோம்  நல்வினை என்றால் தீயனை கலையெடுத்து; குருவின் தன்மைகளான மனவடக்கம், புலனடக்கம், தியாகம், கடவுளை நோக்கிய தவம் போன்ற நற்குணங்களுடன்  மெய்ஞானத்தை பெறுவதாகும். 

ஸ்ரீமத் பகவத்கீதையின் வரிகள் "கடமையை செய் பலனை எதிர்பாராதே"!! 

நாம் ஏன்  பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்து கொண்டே இருக்க வேண்டுமா என்ற கேள்வி நமக்குள் எழும். ஆம் நமக்கு விதிக்கப்பட்ட கட்டத்தில் எது நமக்கு  கொடுக்கப்பட்டதோ அதைமட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியுமோ அவைகள் மட்டும் இந்த பிரபஞ்சத்தில் செய்யவேண்டும்.  முற்பிறவி, பூர்வ ஜென்மம்  ஆராய்ச்சில் நாம் ஈடுபடாமல் இங்கு நாம் வாழும் வாழ்க்கையில் எதற்காகப் பிறந்திருக்கிறோம் என்று கர்மகாரகனை கொண்டு அவரவர் வேலைகளை சரிவரச் செய்ய  வேண்டும்.

என்னால் வாழமுடியவில்லை சாகப்போகிறேன் என்று பயந்து ஓடும் பலர் உண்டு. இந்த பிரபஞ்சத்தில் நாம் செய்யும் நித்ய கர்மா என்கிற தினசரி வேலைகள், பெற்றோர்,   கணவன், குழந்தை, கணவனின் பெற்றோர்கள் மற்றும் சக மக்களுக்கு செய்யும் கடமையிலிருந்து தவறக்கூடாது, கடவுளுக்கு பிடித்த விஷயங்கள் மற்றும் இறந்தவர்களுக்கான கர்மா என்று நம்மால் எண்ணமுடியுமோ அதைக் கட்டாயம் செய்யவேண்டும். 

ஜாதகத்தில் பத்தாம் பாவம் தான் ஒருமனிதனின் ஊழ்வினை மற்றும் வேலை பற்றிச் சொல்லும் இடம். அலுவகத்திற்கு சென்றால் அங்கு உள்ள கடமையைச் சரியாக செய்ய  வேண்டும். என்ன சார் எனக்கு ப்ரோமோஷன் கிடைக்கவில்லை.. நான் ஏன் வேலை செய்ய வேண்டும் என்று வேறு எதாவது வேலை செய்யக்கூடாது. உயர் அதிகாரி கொடுக்கும் வேலையை சரிவர செய் பகவான் அதற்கேற்ற கூலி நிச்சயம் உண்டு. மனிதனாய் பிறந்த அனைவருக்கும் உள்ள ஒரு ஏக்கம் நம்மை வேலையில் உயர்த்திக்கொண்டு இருக்கவேண்டும். அதற்கு என்ன என்ன செய்யமுடியுமோ அதைச் செய்யலாம் எடுத்துக்காட்டாகப் படிப்பில் உயர்த்திக் கொள்ளுதல், அல்லும் பகலும் அயரா உழைப்பதின் மூலம் வேலையின் மூலம் ஊக்கம் பெறுவீர்கள். அதுவும் கிட்டவில்லை என்றால் அது உங்கள் பழைய ஊழ்வினை அதற்காக தளராமல் உங்கள் செயல்களை செய்யவேண்டும். 

பழைய வினையில் நாம் இன்று தவிக்கும்பொழுது திருமணத்தடை, குழந்தை இல்லாமை, வேலை இல்லாமை, நோயால் அவதி, வாழ வழி இல்லாமல் என்று அடுக்கிக்கொண்டு போகலாம். இதற்கு அசராமல் சாகும் வரை நம்மால் முடிந்ததைச் செயல்களை அடுத்த அடுத்து என்று செய்து கொண்டு போகவேண்டும்.

நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும் 

நல்லவாம் செல்வம் செயற்கு.  

         - திருகுறள் 375

பொருள்: தீவினைப் பயனால் வரும் ஊழ்வினையானது, ஒருவன் செல்வம் சேர்க்க எவ்வளவு நல்ல வழிகளில் முயன்றாலும், ஊழ்வினைப்பயனால் அம்முயற்சியில்  தோல்வியுற்று துன்பத்தையே அனுபவிக்க வேண்டிவரும். நல்வினைப் பயனால் வரும் ஊழ்வினையானது, ஒருவனுக்கு தீமை பயக்கும் தருணங்கள் அமைந்தாலும், எவ்வித  சாதகமான சூழல் இல்லையாயினும், அவனுக்கு பொருட்செல்வம் வந்து சேரும் என்று திருவள்ளுவர் கூற்று.

அகத்தியர் கூறும் கர்மா

பூர்வஜென்ம பாவங்களுக்கு இப்பிறவியில் வரும் நோய்கள் பற்றி அகத்தியர் பெருமான் எழுதிய நூலான அகத்தியர் கன்ம காண்டம் -300 இடம்பெற்றுள்ளது. இந்த சித்தர்  விதியைப் பற்றியும், கர்மவினை பற்றியும் அனைவராலும் நம்பப்பட்டுவருகிறது. எடுத்துக்காட்டாக ஒருவரிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காத பாபத்தால் - ஈளை  நோய்; பசுமையாய் வளர்ந்த இளம் செடி,கொடிகளை வெட்டுவதும், பூச்சிகளின் கை, கால்களை வெட்டினால் - வாதநோய்; பிறர் குடியை கெடுத்தல், நல்லோர் மனதை நோகச் செய்தல், பிறர் பசியில் இருக்க அவர் உணவு உண்டால் எட்டு வகை-குன்மநோய்; மரம் செடி அழித்தல், பெற்றோர் மனம் நோகச் செய்தல் - குஷ்ட நோய்;  விலங்குகள், பறவைகள் போன்றவற்றைக் கொன்றால் - வலிப்பு நோய்; பிஞ்சு காய்கறிகள், இலை தழை பறித்தல், பட்டை, வேர் மற்றும் கொடிகள் வெட்டுவதால் -  சைனஸ், ஒற்றைத் தலைவலி, மண்டைக் கரப்பான் போன்ற நோய்கள்; இளம் பயிரை அழித்தல், விந்து அழித்தல், கன்றுக்குரிய பாலைக் குடித்தல், - குழந்தையின்மை  குழந்தை பிறக்காது.

இன்னும் மற்ற தீய காரியங்களான வீண் வம்பு பேசுதல், பொய் பேசல், ஆங்காரம், ஆணவம், ஊன் உண்ணல், நன் மங்கையரைக் கற்பழித்தல், புண்ணிய காரியங்களைக் கெடுத்தல், குடிநீரைக் கெடுத்தல், வஞ்சகம் பேசுதல், கொடுத்த வாக்கை மறுத்தல், விஷமிடல், வெடி வைத்தல், கல்லெறிதல், சிவ யோகிக்கு சினம் உண்டாக்குதல் போன்ற பாவம் செய்பவர்களுக்கு அதற்கேற்ற நோய்களான இரத்த சோகை, கல்லீரல் மண்ணீரல் வீக்கம், சீத பேதி, முதுகில் வரும் இராஜபிளவை, கண்நோய் 96 வகைகள் தோன்றும் என்று பிரித்துச் சொல்லுகிறார். அதனால் இன்று முதல் தீய வினைகளை செய்யாமல் வாழவேண்டும் எம்பெருமானே என்று அகத்தியர் கூறுகிறார். 

ஜாதகத்தில் வினைகளுக்கு காரகம் வகிக்கும் லக்கின கேந்திர திரிகோணங்கள் நேர்முகமாகவும், 6,8,12 மறைமுகமாக இருந்து கர்மவினை அனுபவிக்க வைப்பார். அதனால்  நாம் திரும்பிப்பார்க்காமல் புத்தர் வாழ்க்கை பற்றிச் சொல்லும் எட்டு நெறிகளான நல்லெண்ணம், நல்ல நம்பிக்கைக் கொள்ளுதல், நல்வாய்மை, நன்னெறி தவறாமல்  இருத்தல், நல்வாழ்க்கை, நன் முயற்சி, நற்சாட்சி, நல்ல தியானம் என்று நாம் வாழ்ந்தால் கர்மாவிலிருந்து விடுபட்டு முக்தி என்ற ஜோதியாக திகழ்வோம்.

- ஜோதிட சிரோன்மணி தேவி

தொலைபேசி : 8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com