சுடச்சுட

    

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் இன்று சட்டத்தேரில் திருவீதியுலா

    By DIN  |   Published on : 12th September 2019 11:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    lordmeenakshisundereaswer

     

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் இன்று சட்டத்தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வருகிறார். 

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சுந்தரேஸ்வரரின் திருவிளையாடல்கள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றன. 

    இதில் 7-ம் திருநாளில் சுந்தரேஸ்வரருக்குப் பட்டாபிஷேகமும், 9-ம் திருநாளில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

    11-ம் திருநாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வர் சட்டத்தேரில் எழுந்தருளி ஆவணி மூல வீதி, கீழ் பட்டமார் தெரு வழியாக கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தை வந்தடைந்தனர். 

    நாளை முக்கிய நிகழ்வாக பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai