சுடச்சுட

    

    விநாயகருக்கு சமர்ப்பிக்கப்பட்ட லட்டு ரூ.17 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம்

    By DIN  |   Published on : 13th September 2019 03:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    ஹைதராபாதில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான விநாயகர் சிலைக்கு சமர்ப்பிக்கப்பட்ட லட்டுவை ராம் ரெட்டி என்பவர், ரூ. 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.
    ஹைதராபாதில் உள்ள பாலாப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 21 கிலோ எடை கொண்ட லட்டுவை அவர் ரூ. 17 லட்சத்து 60 ஆயிரத்துக்கு போட்டி போட்டு ஏலம் எடுத்தார். கடந்தாண்டு பாலாப்பூர் கணபதி லட்டு, ரூ. 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai