Enable Javscript for better performance
சர்வபூபால வாகனம் சோதனை ஓட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சர்வபூபால வாகனம் சோதனை ஓட்டம்

    By DIN  |   Published on : 14th September 2019 03:12 AM  |   அ+அ அ-   |    |  



    திருமலை ஏழுமலையானுக்கு வரும் செப்.30-ஆம் தேதி முதல் அக்.8-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்த உள்ளது. பிரம்மோற்சவத்தின் போது காலை,  இரவு என இரு வேளைகளிலும் 14 வாகனங்களில் மலையப்பஸ்வாமி மாடவீதியில் வலம் வர உள்ளார். இந்த வாகனங்களில் மிகவும் எடை அதிகமுள்ள வாகனம் சர்வபூபால வாகனம்.
    பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் இரவு இந்த வாகன சேவை நடந்து வருகிறது. அதில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்பஸ்வாமி மாடவீதியில் எழுந்தருள்வார். பிரம்மோற்சவத்தின் போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  1047 கிலோ எடையுள்ள சர்வபூபால வாகனத்தின் சோதனை ஓட்டத்தை வெள்ளிக்கிழமை தேவஸ்தானம் நடத்தியது. ஸ்ரீபாதம் தாங்கிகள் இந்த வாகனத்தை மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு வந்து சோதனை நடத்தினர். 
    அதேபோல் சனிக்கிழமை நடக்கவுள்ள கருடசேவையும் பிரம்மோற்சவ சோதனை ஓட்ட  கருடசேவையாக தேவஸ்தானம் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
     

    kattana sevai