ஷீரடி, மந்திராலயத்துக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா? ஐ.ஆர்.சி.டி.சி. புதிய ஏற்பாடு

மதுரையில் இருந்து சென்னை வழியாக ஷீரடி, மந்த்ராலயத்துக்கு பாரத தரிசன சிறப்பு சுற்றுலா ரயில்..
ஷீரடி, மந்திராலயத்துக்கு சுற்றுலா செல்ல வேண்டுமா? ஐ.ஆர்.சி.டி.சி. புதிய ஏற்பாடு


மதுரையில் இருந்து சென்னை வழியாக ஷீரடி, மந்த்ராலயத்துக்கு பாரத தரிசன சிறப்பு சுற்றுலா ரயில் அக்டோபர் 5-ம் தேதி இயக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஐ.ஆர்.சி.டி.சி செய்துள்ளது.

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) கடந்த 2005-லிருந்து பாரத தரிசனம் சிறப்பு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு பாரத தரிசன சுற்றுலா என்ற பெயரில் வரும் அக்டோபரில் மதுரையில் இருந்து சென்னை வழியாக  ஷீரடி, மந்த்ராலயத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில் அக்டோபர் 5-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் பண்டேரிபுரம், ஷீரடி, மந்த்ராலயம் ஆகிய இடங்களுக்கு பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். 

இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் கூறியது:

இந்த ரயில் மதுரையில் இருந்து அக்டோபர் 5-ஆம் தேதி புறப்பட்டு, மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக பண்டேரிபுரம், ஷீரடி, மந்த்ராலயத்துக்கு செல்கிறது. இந்த ரயில் பயணிகளுக்கு தென் இந்திய சைவ உணவு வழங்கப்படும்.  உணவு சமைக்க தனி பெட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயிலில் குழுவாக தங்குமிட வசதி, சுற்றி பார்க்க ஏசி அல்லாத வாகன வசதி செய்யப்படும். ரயிலில் சுற்றுலா மேலாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஆகியோர் இருப்பார்கள். பயணிக்கு  பயணக்காப்பீடு  வசதி  செய்யப்படும்.

6 நாள்களுக்கு பயணக்கட்டணம் நபருக்கு ரூ.5,670. இந்த ரயில் தொடர்பாக கூடுதல் விவரங்களை அறிய சுற்றுலா தகவல்  மற்றும் வசதி மையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்ற முகவரியை அணுகலாம். மேலும்,  (0) 9003140680, 9003140681 என்ற செல்லிடபேசி எண்களிலும்  தொடர்புகொள்ளலாம் என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com