கடல் கோயிலுக்குச் செல்ல விருப்பமா? இதோ ஐ.ஆர்.சி.டி.சி புதிய ஏற்பாடு!

மதுரையில் இருந்து சென்னை வழியாக பஞ்ச துவாரகைகள், நிஷ்களங்க மகாதேவர்..
கடல் கோயிலுக்குச் செல்ல விருப்பமா? இதோ ஐ.ஆர்.சி.டி.சி புதிய ஏற்பாடு!

மதுரையில் இருந்து சென்னை வழியாக பஞ்ச துவாரகைகள், நிஷ்களங்க மகாதேவர் கடல் கோயிலுக்கு பாரத தரிசன சிறப்பு சுற்றுலா ரயில் அக்டோபர் 12-ம் தேதி இயக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஐ.ஆர்.சி.டி.சி செய்துள்ளது.

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) கடந்த 2005-லிருந்து பாரத தரிசனம் சிறப்பு சுற்றுலா திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் பஞ்ச துவாரகைகள், நிஷ்களங்க மகாதேவர் கடல் கோயில் தரிசனத்துக்கு பாரத தரிசன சுற்றுலா ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

மதுரையில் இருந்து அக்டோபர் 12-ஆம் தேதி இந்த சுற்றுலா ரயில் புறப்பட்டு, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக நாத் துவாரகை, கான்க்ரோலி துவாரகை, பேட் துவாரகை, டாகோர் துவாரகை, நிஷ்களங்க மகாதேவர் கடல் கோயிலையும் தரிசிக்கலாம். 

இந்த நிஷ்களங்க மகாதேவர் கோயிலானது கடலுக்குள் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐந்து லிங்கங்கள் இங்கு அமைந்துள்ளன. தினமும் கடல்நீர் உள்வாங்கி குறைந்தது 6 மணி நேரங்கள் மட்டுமே இந்தக் கடல் கோவிலைத் தரிசிக்க இயலும். 

கடல் கோயிலைத் தரிசிக்க இந்த சுற்றுலா  ஒரு அரிய வாய்ப்பாகும். இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரி ஒருவர் கூறியது: 

இந்த ரயிலானது 2-ஆம்  வகுப்பு தூங்கும் வசதி கொண்ட 12 பெட்டிகள் மற்றும் பேன்ட்ரி கார் கொண்டது. 

பயணத்தைப் பொருத்தவரை, மொத்தம் 10 நாள்கள் ஆகும் ஒரு நபருக்கு ரூ.9,450 மட்டுமே கட்டணமாக குறைந்த அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கட்டணத்தில் ரயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, உள்ளூரை சுற்றிப் பார்க்க வாகன வசதி, தங்கும் வசதி, சுற்றுலா மேலாளர் மற்றும் பாதுகாவலர் வசதி ஆகியவை அடங்கும். 

இந்த ரயிலில் முன்பதிவு செய்யவும், மேலும் விவரங்களுக்கு இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அணுகலாம். தவிர, 9003140680, 9003140681 என்ற செல்லிடபேசி எண்களிலும்,  இணையதள முகவரியும் தொடர்புகொள்ளலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com