சொல்வதைச் செய்பவர்கள் யார் யார்?

இவ்வுலகில் வாழும் ஒரு சிலருக்கு மட்டுமே, மனோ தைரியத்துடன் துணிந்து நின்று, காரியங்களைச் செய்து..
சொல்வதைச் செய்பவர்கள் யார் யார்?

இவ்வுலகில் வாழும் ஒரு சிலருக்கு மட்டுமே, மனோ தைரியத்துடன் துணிந்து நின்று, காரியங்களைச் செய்து வெற்றி பெறும் இயல்பைப் பெற்றிருப்பார்கள். அவர்களில் ஒருவர் தான், ஆம், ஜூலியஸ் அகஸ்டஸ் ஸீசர், ரோமானிய பேரரசின் முதல் பேரரசர் ஆவார். அவரின் அமைதி மற்றும் செழிப்பு கொண்ட pax romana எனும் போர் நிறுத்த சகாப்தம் 200 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்தது. 

ரோமானிய அரசின் மேலவை உறுப்பினராக இருந்த, கையுஸ் ஆக்டோவிஸ் என்பவற்றின் மகனாக, 23-செப்டம்பர், 63 BC-ல் பிறந்தார். இவரின் தாய்மாமன் ஆன ஜூலியஸ் சீசர் என்பவரை படுகொலை செய்த பின்னர் தாம் அவரின் அரசியல் வாரிசு என்று கூறி தமது பெயரான ஆக்டாவியஸ் என்பதற்கு முன்னால் தமது பெயரை ஜூலியஸ் அகஸ்டஸ் சீசர் என மாற்றி ரோம் நகரத்திற்கு வந்தார். அப்போது மார்க் அன்டனி என்பவர் பதினெட்டே வயதான, இவருக்கு எதிராக செயல் பட்டு இவரின் சொத்துக்களைக் கவர்ந்தார். 

பின்னர் பல்வேறு போராட்டங்கள், சூழல்களுக்குப் பிறகு ரோம் நகர பேரரசை தன்வசம் கொணர்ந்து, அதனை மேலும் விரிவாக்கினார். ஆடம்பரத்தைத் தவிர்த்தார், இதன் கம்பீரம் நாட்டுமக்களை கவர்ந்தது. இவரின் அறநெறி மற்றும் நல்லொழுக்கம் கடைப்பிடித்தார் இவர் என்ன சொன்னாரோ அதனையே செயல்படுத்தவும் செய்வதோடு அவரும் அவ்வாறே நடந்தார். இவரின் மகள், ஜூலியா கெட்ட சகவாசத்தால் விபசாரம் போன்றவற்றுள் ஈடுபட்ட போது அவரை, நாடு கடத்தினார். 

இவரது பேத்தி அவரின் பெயரும் ஜூலியா தான். அவரும் தனது தாயைப் போல் நடந்து கொண்டதால் அவரையும் நாட்டை விட்டு விரட்டி அடித்தார். இவரின் செய்கைகள், மக்கள் மனதில் இவருக்கிருந்த மதிப்பும் மரியாதையும் அதிகமாகியது. இவரின் இப்படிப்பட்ட துணிகரமான செய்கைகளால் ரோமானிய பேரரசு இவரின் காலத்தில் சிறப்புற்று விளங்கியது. அவரை, இந்நாளில் நினைவு கூறுவோம். அவரின் நேர்மையான செய்கைகளை கடைப்பிடிப்போம்.

ஜோதிடப் பார்வையில், சொல்வதை செய்பவர்கள் / சொல்லாததையும் செய்பவர்கள் யார் யார்? 

மேஷ லக்கினகாரர்கள்:

இவர்களின் ஜாதகத்தில், 3 ஆம் இடத்தில் , சனி இருப்பின் இந்த ஜாதகருக்கு கெட்டவர் ஆகையால், இரக்க மற்ற குணமும், தான் எடுத்துக்கொண்ட காரியத்தை எப்படியும் முடிக்க வேண்டும் என்ற வேகத்தால், குரூரமான செயல்களில் ஈடுபடுவதும், மற்றவர்களுக்கென்று எதையும் செய்யாத மனோபாவமும் உண்டாகும். 

ரிஷப லக்கினகாரர்கள்:
இவர்களின் ஜாதகத்தில், 3 ஆம் இடத்தில் , சனி இருப்பின், மனோ தைரியத்தையும், துணிந்து காரியங்களைச் செய்து வெற்றி பெறும் இயல்பையும் உருவாக்கும்.

மிதுன லக்கினகாரர்கள்:
இவர்களின் ஜாதகத்தில், 3 ஆம் இடத்தில் ,சூரியன் இருப்பது மிகவும் விசேஷம். இவருக்கு வசியம் ஆகாதவர்கள் கிடையாது என்று சொல்லிவிடலாம். வீர சாகச செயல்களைச் செய்யக்கூடியவரும், ஜனங்களை திரட்டி ஒன்று சேர்த்து காரியங்களைச் சாதிக்கக் கூடியவரும். பிரச்சாரம் செய்வதில் வல்லவரும் ஆவார்கள். இவர்களின் ஜாதகத்தில், 3ஆம் இடத்தில், கேது இருப்பது இவர்களுக்கு, மிகவும் தைரியசாலியாகவும், துணிந்து காரியங்களைச் செய்யக்கூடியவராகவும் மாற்றும். 

விருச்சிக லக்கினகாரர்கள்:
இவர்களின் ஜாதகத்தில், 3 ஆம் இடத்தில் ,குரு இருப்பதால், நினைத்த காரியத்தை முடிக்கக் கூடியவராயும் , சாந்த குணம் உடையவராயும் இருப்பார்கள். பிறர் ரகசியங்களை அறிவதில் கெட்டிக்காரர்கள். துப்பறியும் வேலையில் இருப்பார்கள்.

மீன லக்கினகாரர்கள்:
இவர்களின் ஜாதகத்தில், 3 ஆம் இடத்தில் ,5ஆம் அதிபரான சந்திரன் இருக்கப் பிறந்தவர்கள் நல்ல தைரியசாலிகள். மனத்தால் நினைத்தபடி காரியத்தை முடிக்கக் கூடியவர்கள். இவர்களும் பிறரின் ரகசியத்தை அறிவதில் கெட்டிக்காரர்களாவதால் , துப்பறியும் வேலையில் இருப்பார்கள். மேலே சொல்லப்பட்ட கருத்துக்கள் யாவும் அசுபர் தொடர்பு கொள்ளும்போது பலன்கள் மாறுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது என அறியவும். எனவே, ஜூலியஸ் சீசர் பிறந்த இந்நன்னாளில் நாமும் சபதம் ஏற்போம், சொல்வதைச் செய்வோம், நல்லதே சொல்வோம் என...சொல்வதைச் செய்பவர்களை இந்த நாடு போற்றும், என்பதைக் கூறுவதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. 

சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம். 

- ஜோதிட ரத்னா தையூர்.சி.வே.லோகநாதன்

தொடர்புக்கு : 98407 17857   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com