Enable Javscript for better performance
மருத்துவ ஆராய்ச்சியில் ஆன்மீக மஞ்சள்- Dinamani

சுடச்சுட

  
  manchal

   

  அறிவியல் ஆய்வு

  மஞ்சள் என்பது குர்க்குமின் (Curcumin) என்ற பாலிபினாலிக் வேதியியல் பொருள் அடங்கியுள்ளது. இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடிய நன்மை சொல்ல முடியதாக அளவு பயன்களைத் தரும் பொருளாக உள்ளது. மஞ்சளின் தாயகம் ஆசிய கண்டம், இவற்றில் இந்தியாவில் அதிகம் புனிதப் பொருளாக மற்றும் அருமருந்தாக கொண்டாடப்படுகிறது. இந்த குர்குமின் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் சீரமைப்பதிலும் சிறந்து செயல்படுகிறது. 

  இந்த வேதியியல் ரிதீயாக பொட்டாசியம் சத்து அதிகமாகவும் அவற்றோடு எதிர் ஆக்ஸிகரணியாகவும் எதிர் தொற்றாகவும் செயல்படுகிறது. மஞ்சள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும், மூளை தொடர்பான மறதி நோய் மற்றும் மன அழுத்த பிரச்னைகளை போக்கும் ஆற்றல் கொண்டது என்று அறிவியல் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் அதிக உணவாகவோ மருந்தாகவோ உபயோகபடுத்திக்கிறோம். ஆனால் வெளிநாட்டவர் காப்புரிமை (Patent) வாங்கிவிட்டனர். இதுவே நமக்குக் கொஞ்சம் அவமானம் தான். மஞ்சள் என்பது முதலில் நிறத்துக்காக உபயோகப் படுத்தினர் பின்பு அவற்றினை சித்தர்கள் மருந்தாக மற்றும் ஆன்மீக ரீதியாகச் செயல்படுத்தப்பட்டது. இந்தியாவில் மஞ்சள் வகையில் கப்பு மஞ்சள், கரி மஞ்சள், மர மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என நான்கு முக்கிய வகைகள் உண்டு. 
   
  ஆன்மீக ஜோதிட அலசல்

  • மஞ்சளில் இந்துக்களின் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். வீட்டு நிலப்படியில் ஆரம்பித்து, சமையல் அறையில் சுற்றிச் சூழ, பூஜை அறை என்று எல்லா இடத்திலும் மங்களம் அடங்கிய பொருள் மஞ்சள் ஆகும். ஜோதிடத்தில் மஞ்சள் என்பவர் குரு என்ற சுபர் ஆவார். ஒரு வீட்டில் சுபிக்ஷம் பொழிய வேண்டுமானால் குருவின் அருள் வேண்டும். அவரை பிள்ளையாராகப் பிடித்தால் கெட்ட சக்திகள் ஆட்கொள்ளும் கிரகங்களைத் தூக்கி எரிந்து நேர்மறை அதிர்வு சக்தி பெருகும் என்பது ஒரு விதி. குங்குமம் தயாரிக்க மஞ்சள் முக்கியம்.
    
  • சுமங்கலிப் பெண்கள் மஞ்சளைப் பூசிக்கொள்வதால் அவளை அவள் வீட்டாரையும் நல்ல சக்திகள் ஆட்கொள்ளும். திருமணத்தில் திருமாங்கல்ய கயிறு, காப்பு, அட்சதை அனைத்திலும் உள்ளது மஞ்சள். அதுவே குருவாக (மஞ்சள்) இருந்து மணமக்களை ஆசீர்வாத கூடிய வாழ்த்து தெரிவிப்பதாக ஒரு சூட்சமம் உண்டு.  
    
  • பொங்கல் பானைகளில் சுற்றிக் கட்டப்பட்டது பசும் மஞ்சள் அவ்வளவு விசேஷம். பொங்கல் முடிந்த மறுநாள் கணுப்பண்டிகை அன்று பொங்கல் பானையில் கட்டிய மஞ்சளோடு சேர்த்து மிச்சம் பசும் மஞ்சளையும் அம்மியில் அரைத்துச் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் கொடுப்பார்கள். அந்த மஞ்சள் கொத்திலிருந்து ஒரு துண்டு மஞ்சளை எடுத்து வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கொடுத்து நெற்றியில் மஞ்சளைக் கீறிவிடச் சொல்லி ஆசீர்வாதம் பெறுவார்கள்.
    
  • வீட்டில் நல்லகாரியம் ஆரம்பிக்கும்பொழுது அல்லது ஹோமம் ஆரம்பிக்கும்பொழுது அங்கு கொஞ்சம் மஞ்சள் தூள் அல்லது மஞ்சள் கரைசல் தெளித்து விட்டு ஆரம்பித்தால் அங்கு சுத்தபத்ததுடன் ஆரம்பிப்பதாக அர்த்தம். இதையே நம் சித்தரில் ஒருவரான அகத்தியர் பெருமானின் பூஜை முறையில் தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி, கடவுள் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட  செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி பின்பு  சித்தரின் தியானம் மந்திரங்களை உச்சரித்து தியானம் செய்வதால் அகத்திய முனிவரின் பூஜை பலன்களான கலைகளில் மேன்மையும், கல்வித்தடை நீங்கும், புதன் தோஷம், பித்ருசாபம் மற்றும் பாவங்கள் நீங்கும், புகழ் தேடி வரும், சகலவிதமான நோய்களும் தீரும், கேட்டது அணைத்தும் கிட்டும். இந்த பூஜை மஞ்சள் கொண்டு ஆரம்பித்து தோஷத்தை ஓடச் செய்து சுப கிரகத்தைப் பலப்படுத்த என்பது சூட்சமம்.

  நோய்களுக்கு குட் பை (good bye)

  பொன்னிறமாம் மேனி புலானாற்ற மும்போகும்
  மன்னு புருட வசியமாம் பின்னியெழும்
  வாந்திபித்த தோடமையம் வாதம் போற் தீ பனமாங்
  கூர்ந்தமஞ்ச ளின்கிழங்குக்கு
  தலைவலிநீ ரேற்றஞ் சளையா மேகம்
  உலைவுதரும் பீநசத்தி னுமே வலிசுரப்பு
  விஞ்சு கடிவிட மும் வீறுவிர ணங்களும் போம்
  மஞ்சள் கிழங்குக்கு மால் 
  மஞ்சட் குளிதனக்கு மாறாத்துர்க் கந்தமொடு
  விஞ்சுமுக சாட்டியமும் விட்டகலுந் கொஞ்சலுறும்
  ஐய மொழியு மடர்வியர்வுங் காணாது
  வைய மதனில் வழுத்து 
  நீர்க்கடுப்பு காசமொடு நீடு விடாசுரமுந்
  தீர்க்க நமைச்சல் வெப்புஞ் சேர்மலமும் பார்க்கு ண்மிக
  அஞ்சியே யேகுமஞ்ச ளாம்வத்தி ரம்புனைந்தால்
  வஞ்சியே நன்றாய் வழுத்து                      

                   - (அகத்தியர் குண பாடம்)

  • மஞ்சளை உடலில் பூசிக் குளிப்பதன் மூலம் உடல் பொன்னிறம் பெறும்; கெட்ட வாடை நீங்கும்; வசீகரமான தோற்றம் உண்டாகும்; வாந்தி, வாய்வு, சூடு, திருஷ்டி தோஷம், தலைவலி, நீர் கோத்தல், மூக்கில் நீர்வடிதல், வீக்கம், வண்டுகடி, புண் ஆகியவை நீங்கும் தன்மை இந்த மஞ்சளுக்கு உண்டு என்று மருத்துவ குணங்களை அகத்தியர் விரிவாகவே சொல்லி இருக்கிறார். 
    
  • இந்தியா வெப்ப தன்மையைக் கொண்ட இடம் என்பதால் பெண்கள் மஞ்சளை உடம்பில் போட்டுக்கொள்ளுவதால் ஈரப்பத மூட்டும் கிரீம் (moisturizer cream) பயன்பட்டுள்ளது. கஸ்தூரி மஞ்சள் அரைத்துப் பசையாக்கித் தேய்த்துக் குளிக்க கரப்பான், பருக்கள், கொப்பளம், அரிப்பு, சொரி, சிரங்கு, சீழ்க் கட்டி, கிருமி நோய்கள் போன்றவற்றைப் போக்கும். 
    
  • குழந்தைகளுக்கு மூச்சடைப்பு மற்றும் பெரியவர்களுக்கு காசநோயினை விரட்டும் ஒரு இன்ஹேலர் என்று சொல்லலாம். இன்ஹேலர் என்று சொன்னது விரலி மஞ்சள். விரலி மஞ்சளை நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு அந்த புகையை மூக்கின் வழியாக உள்ளே இழுக்க மூக்கடைப்பு மற்றும் இரைப்பு கட்டுப்படுத்தப்படும். 
    
  • கபம் மற்றும் உஷ்ணம் அதிகரிப்பினால் ஏற்படும் தொடர் இரும்பல் உள்ளவர்கள், இரவில் துக்கம் இல்லாதவர்கள் அருமருந்து மஞ்சள் தூள். ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் உடன் பசும்பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் மூன்று நாட்களுக்குள் குணமாகிவிடும்.
    
  • மஞ்சள் கிருமி நாசினி. உடலில் ஏற்படும் புண்ணை, வெட்டு காயத்தைக் குணப்படுத்து ஒரு நுண்ணுயிர்க்கொல்லி கிரீம் (Antibiotic cream)
    
  • கண் வலி இருப்பவர்களுக்கு ஒரு ஸ்பூன் நசுக்கிய மஞ்சளை சுத்தமான நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிய  நீரில் துணியை நனைத்து, கண்களின் மேல் போட்டுக் கொண்டால் கண் வலி குறையும்
    
  • இரவு படுப்பதற்கு முன் தேங்காய் எண்ணெய் உடன் மஞ்சள் குழைத்து தடவி; பின்பு பச்சைப்பயறு மாவு கொண்டு கழுவினால் அவ்வளவு அழகு மற்றும் ஜொலிஜொலிப்பு வெளிப்படும் இது ஒருவகை ஃபேஸ் வாஷ் (face wash), 
    
  • அம்மை நோய் காலங்களிலும், பெண் பிள்ளை பூப்பெய்தும் காலங்களிலும் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் சடங்கும் எதற்கு என்றால்? இது ஒரு கிருமி நாசினி என்பதால் தான்.
    
  • குடல் புற்றுநோய் அதிகமாக இருக்குதே, ஆனால் இந்தியாவிலோ இது மிகச் சொற்பமா இருப்பதற்கு காரணம் என்று பார்த்தால் நிறைய மஞ்சள் உட்கொள்ளுவதேயாகும். ஆரோக்கியமாய் இருக்கும்போது தினமும் காலையில் எழுந்ததும் ஒரு சிறு நெல்லிக்காய் அளவு மஞ்சள் மற்றும் வேம்பு உருண்டைகளை உட்கொள்வது கேன்சர் செல்களை  நீக்க வல்லது என்று ஆய்வில் கூறப்படுகிறது. ஆக, மொத்தத்தில் உடல் பகுதி, தோல் பகுதி மற்றும் ரத்தம் சித்தரிக்கச் சிறந்த அருமருந்து மஞ்சள் ஆகும். ஆயுர்வேத மருத்துவத்தில் அனைத்து நோய்க்கும் மஞ்சள் மற்ற மருந்து பொருளோடு சேர்த்து கொடுக்கப்படுகிறது.
    
  • சுமங்கலிகள் அக்காலத்தில் மஞ்சள் கயிறு தான் கட்டிக் கொள்வார்கள். ஆனால் ஒருசிலர் மஞ்சள் கயிருக்கு பதில் தங்கம் சைனில் தாலியைக் கோத்து கொள்கின்றனர். இங்கு மஞ்சள் கயிறு என்பது உடல் சுத்தி மற்றும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் என்று ஒரு சில பெரியோரால் சொல்லப்படுகிறது. எதுவாக இருந்தாலும் நல்லது என்று எடுத்துக் கொண்டு முழுவதும் தங்கமாக கோக்காமல், தாலியில் கொஞ்சம் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டு பிறகு தங்க சரடு கட்டிக்கொண்டால் நல்லது. இந்தியாவில் தற்பொழுது மார்பக புற்றுநோய் அதிகமாகி உள்ளது.
    
  • மஞ்சளால் அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதி தரும் படிவு (plaque) குறைக்கின்றது. அதுதவிர இந்த மூலிகை செரிமான சக்தி, மூட்டு வலி, சுளுக்கு, வீக்கம், மூட்டு வலி, வயிற்று வலி என்று பல்வேறு நோய்களின் நிவாரணி.

  தோல் நோய்களுக்கு அருமருந்து மற்றும் தோல் பளபளப்பாகும் தன்மை கொண்டது. அதனால் தான் இன்று இதைக் கொண்டு சோப்பு கிரீம் என்று பல உருவில் விற்பனை ஆகிறது. மஞ்சள் விலை குறைவு அதேயே கிரீமாக மாறும்பொழுது அதேயே நாம் அதிகவிலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம் அதைத் தவிர்த்தல் நல்லது. மஞ்சளை எவ்வாறெல்லாம் உட்கொள்ளலாம் என்று நம் சித்தர்கள் கூறியபடி நடப்போம். முடிந்தவரை அலோபதி மாத்திரை தவிர்ப்போம் வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு தீர்வு காண்போம்.  

  குருவே சரணம் 

  - ஜோதிட சிரோன்மணி தேவி

  Whats app: 8939115647
  Email: vaideeshwra2013@gmail.com


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai