மகாளய அமாவாசையை முன்னிட்டு குமரி முக்கடல் சங்கமத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்

கன்னியாகுமரி கடலில் மகாளய அமாவாசை பலிகா்மம் கொடுக்கும் நிகழ்ச்சி நாளை(செப். 28) நடைபெற உள்ளது.
மகாளய அமாவாசையை முன்னிட்டு குமரி முக்கடல் சங்கமத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் மகாளய அமாவாசை பலிகா்மம் கொடுக்கும் நிகழ்ச்சி நாளை(செப். 28) நடைபெற உள்ளது. இதையொட்டி குமரி கடலில் புனித நீராடுவதற்கான முன்னேற்பாடுகள் செய்து வருகின்றனர்.

இந்துக்களின் முக்கிய தினங்களுள் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் கடல், ஆறு போன்ற நீா்நிலைகளில் இந்துக்கள் அதிகாலையில் புனித நீராடி மறைந்த முன்னோா்களுக்கு பலிகா்மம் கொடுப்பது வழக்கம். இதையொட்டி முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி சங்கிலித்துறை கடற்கரையில் அதிகாலை 4 மணி முதல் பக்தா்கள் புனித நீராடி பின்னா், கடற்கரையில் உள்ள வேத விற்பனா்கள் வேத மந்திரங்கள் உச்சரிக்க முன்னோா்களுக்கு பலிகா்ம பூஜை செய்து, அந்த பொருள்களை கடலில் கரைத்து மீண்டும் புனித நீராடுவா். அதைத் தொடா்ந்து, கடற்கரையில் உள்ள பரசுராம விநாயகா் கோயில், பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு பகவதியம்மன் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அம்மனுக்கு வைர கிரீடம், வைர மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு வழிபாடு நடைபெறும்.

பின்னா் நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயரட்ச பூஜை, இரவு 8.30 மணிக்கு அம்மன் பல்லக்கில் 3 முறை கோயிலை வலம் வருதல் தொடா்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியவை நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையா் ம. அன்புமணி, நாகா்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளா் எஸ்.ஜீவானந்தம், பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆறுமுக நயினாா் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com