கோவிந்தா கோஷத்துடன் சென்னையிலிருந்து புறப்பட்டது திருப்பதி திருக்குடை ஊர்வலம்!

திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை, பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில்..
கோவிந்தா கோஷத்துடன் சென்னையிலிருந்து புறப்பட்டது திருப்பதி திருக்குடை ஊர்வலம்!

திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை, பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியுள்ளது. திருக்குடை ஊர்வலத்தை நீதிபதி வி.ராமசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். 

திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது, தமிழ்நாட்டு பக்தர்களின் சார்பில், ஹிந்து தர்மார்த்த சமிதி 11 வெண்பட்டுக் குடைகளை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் சமர்ப்பித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான, ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஊர்வலம், சனிக்கிழமையான இன்று(செப்.28) பூக்கடை சென்ன கேசவ கோயிலில் இருந்து திருக்குடை ஊர்வலம் தொடங்கியுள்ளது. 

சென்னையில் இருந்து கோவிந்தா கோஷங்களுடன் புறப்பட்ட திருக்குடை ஊர்வலத்தைக் காண வழிநெடுக தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காட்டியும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதனிடையே, ஆங்காங்கே நீர், மோர், பானகம், வகை வகையான பிரசாதங்களை பக்தர்களுக்கு வழங்கி வருகின்றனர். இன்று மாலை 4.00 மணிக்கு திருக்குடை ஊர்வலம் கவுனி தாண்டுகிறது.

பின்னர் நடராஜா திரையரங்கம், கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம், காசி விஸ்வநாதர் கோயில் சென்றடைந்து இரவு தங்குகிறது. செப்டம்பர் 29-ம் தேதி, ஐசிஎப், ஜி.கே.எம். காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர், வில்லிவாக்கம் சென்றடைந்து இரவு தங்குகிறது.

இவ்வழியே அக்டோபர் 3-ம் தேதி திருமலையில் மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்கள பொருள்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com