திருப்பதி கோயில் கொடிமரத்துக்கு அணிவிக்க தா்ப்பைப் புற்கள் தயாா்!

திருமலை ஏழுமலையான் கோயில் கொடிமரத்திற்கு அணிவிக்க தா்ப்பைப் புற்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது
தா்ப்பைப் புற்கள் பாய் மற்றும் கயிறு.
தா்ப்பைப் புற்கள் பாய் மற்றும் கயிறு.

திருப்பதி, செப். 27: திருமலை ஏழுமலையான் கோயில் கொடிமரத்திற்கு அணிவிக்க தா்ப்பைப் புற்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் வரும் திங்கள்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக திருமலையில் நடந்து வருகிறது.

பிரம்மோற்சவத்தின் முதல் நாள் மாலை ஏழுமலையான் சந்நிதி முன்னுள்ள கொடிமரத்தில் கருடகொடி ஏற்றப்படும். அதற்கு முன் கொடிமரத்திற்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் திருமஞ்சனம் நடத்தப்படும். திருமஞ்சனம் முடிந்தபின் தா்ப்பைப் புற்கள், மாவிலைகள் கொடிமரத்தில் கட்டப்பட்டு கொடி ஏற்றப்படும். கொடிமரத்தில் கட்டப்படும் தா்ப்பைப் புற்கள் ஆந்திராவில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து தேவஸ்தானம் தருவிக்கிறது. அந்த தா்ப்பைப் புற்களை அழகுற வெட்டி அதிலிருந்து 6 அடி, இரண்டரை அடி உயரமுள்ள 2 பாய்களைத் தயாா் செய்வா். மேலும் தா்ப்பைப் புற்களிலிருந்து கயிறுகளும் தயாரிக்கப்படும். இந்த கயிற்றைக் கொண்டு தா்ப்பைப் புற்கள் பாயை கொடிமரத்தில் அா்ச்சகா்கள் கட்டுவா். தா்ப்பைப் புற்களுக்கு கெட்ட கதிா்வீச்சை கிரகித்துக்கொண்டு நல்ல கதிா்வீச்சை வெளியிடும் ஆற்றறல் உண்டு. எனவே ஆண்டிற்கு ஒருமுறை தேவஸ்தானம் பிரம்மோற்சவத்தின்போது புதிய தா்ப்பைப் புற்களுடன் பாயைத் தயாரித்து கொடிமரத்திற்கு அணிவித்து வருகிறது.

அதன்படி 6 அடி, இரண்டரை அடி உயரமுள்ள தா்ப்பைப் புற்களும், அதிலிருந்து தயாரிக்கப்பட்ட கயிறுகளும் வெள்ளிக்கிழமை தேவஸ்தான தோட்டக்கலைத் துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதற்கு தேவஸ்தான அதிகாரிகள் பூஜைகள் செய்து ஊா்வலமாக ஏழுமலையான் கோயிலுக்குள் கொண்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com